ஆணியே அடிக்காமல் சின்ன கிச்சனிலும் அழகாக அடுக்கி வைக்கலாம்!

You can make small kitchen look beautiful without hammering nail
Beautiful kitchen
Published on

கிச்சன்ல ஷெல்ப் இல்லையா? கவலையே வேண்டாம். ஆணியே அடிக்காமல் கிச்சனை அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள முடியும். ஆணி அடிக்காமல். சுவரில் எந்தத் துளையும் போடாமல் சின்ன கிச்சனிலும் நம்மால் பொருட்களை அழகாக அடுக்கி வைக்க முடியும். நல்ல தோற்றத்தையும் உருவாக்க முடியும். இதற்கு எளிமையான நிறைய வழிகள் உள்ளன.

சமையலறையில் செல்ஃப் (shelf / cabinets) இல்லையென்றால் திறந்த ரேக்குகள், தொங்கும் அலமாரிகள் அல்லது சுவரில் பொருத்தப்பட்ட தட்டுகளைப் பயன்படுத்தி சமையல் பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ஒழுங்கமைக்கலாம். சிறிய சமையலறைகளில் இடத்தைப் பயன்படுத்தி சேமிக்கலாம்.

1. ஒட்டக்கூடிய ஸ்டிக்கர் ஹூக்குகள்(sticker hooks): ஆணி அடிக்காமல் சமையலறையை அழகாக ஒழுங்கமைக்க சுவர் மற்றும் கதவுகளில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கர் ஹூக்குகள், பல வகையான பொருட்களை அடுக்கி வைக்க உதவும். இவை சுவரில் எளிதாக ஒட்டிக்கொள்ளும். இவற்றில் சிறிய கரண்டிகள், ஸ்பூன்கள் போன்றவற்றை வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம், சுற்றுச்சூழல், பணம் மூன்றையும் இனி உங்கள் வசமாக்கும் இயற்கை வீட்டுக் கிளீனர்கள்!
You can make small kitchen look beautiful without hammering nail

2. தற்காலிக ரேக்குகள் (temporary shelves): மேல் அலமாரிகளுக்கு பதிலாக திறந்த ரேக்குகளைப் பயன்படுத்தி தட்டுகள், குவளைகள், பாத்திரங்கள் மற்றும் பிற சமையல் உபகரணங்களை அடுக்கி வைக்கலாம். இப்படி கடைகளில் கிடைக்கும் தற்காலிக ரேக்குகளை பயன்படுத்தி சுவரில் துளை போடாமல் பொருட்களை அழகாக அடுக்கி வைக்கலாம்.

3. தொங்கும் அலமாரிகள் (hanging shelves): இவை சுவரில் மிதப்பது போன்ற தோற்றத்தைத் தரும். இந்த வகை அலமாரிகள் தரையில் இடம் எடுக்காது. இதனால் சிறிய சமையல் அறைகளில் இதைப் பயன்படுத்தலாம். சமையல் பாத்திரங்கள், அலங்காரப் பொருட்களையும் வைக்க உதவும். இழுப்பறைகள் அல்லது கதவுகளுடன் கூடிய தொங்கும் அலமாரிகளும் தற்போது கிடைக்கின்றன.

4. டிராயர் ஆர்கனைசர்கள் (Drawer organisers): சமையலறை டிராயர்களில் ஸ்பூன்கள், கத்திகள், கரண்டிகள், சின்னச் சின்ன தட்டுகள் போன்ற பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைக்க முடியும்.

5. சுவர் ஸ்டாண்ட் (wall mounted shelf): சமையலறை கதவுகளுக்குப் பின்னால் இவற்றை அமைத்து, இதில் சின்னச் சின்ன பொருட்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை அழகாக அடுக்கி சேமித்து வைக்கலாம். ஃப்ளோட்டிங் ஸ்டாண்டுகள், கம்பி ஸ்டாண்டுகள் என பல வகைகளில் கிடைக்கும் இவை, தரை இடத்தை பயன்படுத்தாமல் சுவரில் பொருத்துவதால் இடம் மிச்சமாகிறது.

இதையும் படியுங்கள்:
சமையலில் உங்களையும் சிறந்த ஃசெப்பாக மாற்றிக் காட்டும் சில ஆலோசனைகள்!
You can make small kitchen look beautiful without hammering nail

6. சுவர் கம்பி (wall pegboard): நன்கு வடிவமைக்கப்பட்ட பெக்போர்டு பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், சமையலறையில் அலமாரிகள் இல்லாத இடத்தை நிரப்பக்கூடியதாக இருக்கும். ஸ்டிக்கர் ஷெல்ஃப்கள் அல்லது தற்காலிக ரேக்குகள் இல்லாத சமயத்தில், சுவர் கம்பியும் பயன்படுத்தலாம். இது கிச்சன் பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைக்க வசதியாக இருக்கும்.

7. கதவுக்குப் பின் தொங்கும் ரேக்குகள்: சமையலறை மூலையில் சுழலும் கார்ட்கள் (rolling carts), மல்டி டயர் ரேக்குகள் (multi-tier racks) போன்றவற்றால் ஒரு சிறிய சமையலறைக்கு, புல்-அவுட் சேமிப்பு அலமாரிகளுடன் சின்ன கிச்சனையும் அழகாக அமைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com