பெண்கள் காலையில் கண் விழித்ததும் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

You know what's the first thing women do when they wake up in the morning?
You know what's the first thing women do when they wake up in the morning?
Published on

ம்முடைய சாஸ்திரங்கள் பெண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு நிறைய வழிமுறைகளை வகுத்து கொடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் ஒரு குடும்பத்தின் தூண், அச்சாணி என எல்லாமே அந்த குடும்பத்தில் வாழும் பெண்கள் தான். இதையெல்லாம் கேட்கும்போது பலருக்கும், ‘பழைமையை பேசிக்கொண்டு இருப்பதாகவும், ஆண்களுக்கு எந்த வரைமுறையும் இல்லையா?’ என்பன போன்ற கேள்விகள் இருக்கலாம்.

ஒரு குடும்பம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதுமே பெண்களுக்குத்தான் அதிகம். அதேபோல பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் தெய்வ அம்சங்கள் நிறைந்திருக்கும். ஏனென்றால், பெண்களை சக்தியின் ரூபமாகத்தான் நாம் பார்க்கிறோம். அப்படியான பெண் ஒரு குடும்பத்தில் செய்யும் காரியங்களால் அந்தக் குடும்பம் பல தலைமுறைக்கும் நன்றாக வாழ வழிவகுக்கும் என்பது ஐதீகம். அது பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் பெண்கள் செய்ய வேண்டியது முதலில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து விட வேண்டும். அதன் பிறகு முகம், கை, கால்களை அலம்பிய பிறகுதான் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். இப்போதெல்லாம் பலரும் அதை செய்வதில்லை. அதை செய்தால் குடும்பத்திற்கு மிகவும் நல்லது.

அதேபோல் காலையில் முதலில் அடுப்பைப் பற்ற வைக்கும்போது குளித்த பிறகு செய்வது மிகவும் நல்லது. ஏனென்றால், ஒரு வீட்டின் சமையலறை, பூஜை அறைக்கு நிகராக கருதப்படுகிறது. அதேபோல், சமையல் செய்வதும் யாகம் செய்வதற்கு சமமாகப் பார்க்கப்படுகிறது. எப்படி நாம் தெய்வத்திற்கு யாகம் செய்யும் போது தூய்மையான மனதோடு செய்வோமோ, அதேபோல சமையலும் குளித்து முடித்து நல்ல முறையில் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அது மட்டுமின்றி, நாம் சமையல் செய்யும் இடம் அக்னி பகவான் இருக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, தினமும் இரவு படுக்கும் முன்பே சமையலறையை துடைத்து சுத்தம் செய்து வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்த பின் மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கிய பிறகு சமையல் செய்வது குடும்பத்தை மேலும் நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும். குடும்பத்தின் ஆரோக்கியமே அங்கு சமைக்கப்படும் உணவில்தான் உள்ளது. எனவே, அந்த இடத்திற்கு நாம் இத்தனை முக்கியத்துவம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அழகென்பது பெருமிதமல்ல; மாய கற்பிதம்!
You know what's the first thing women do when they wake up in the morning?

அது மட்டுமின்றி, தினமும் காலையில் தொடங்கும் இந்த வேலைகளை செய்யும்பொழுது பெண்கள் முடிந்த வரையில் நைட்டி அணிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், நைட்டி அசுப வஸ்திரமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, அதை அணிந்து கொண்டு பூஜை செய்வதோ, சமையல் செய்வது கூடாது.

இத்துடன், குடும்பத்தில் உள்ள பெண்கள் எப்பொழுதும் பொய் பேசவே கூடாது என்பதை சாத்திரம் வலுவாகச் சொல்கிறது. பொய் பேசும் குடும்பத்தில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார் என்பதும், அந்தக் குடும்பத்தில் தொடர்ந்து துன்பங்கள் நேரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை சரிவர கடைபிடித்தாலே குடும்பத்தில் அஷ்ட தேவதைகளும் அங்கு இருந்து அருள்புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சின்னச் சின்ன மாறுதல்களை குடும்பத்தில் செய்தாலே போதும். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள், துன்பங்கள் எல்லாம் நீங்கி மண் குடிசை கூட மாளிகையாக மாறி விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com