நாம் இருக்கும் வீடு நமக்கு மிகவும் ஸ்பெஷலான இடம். அந்த இடத்தில் நாம் கொண்டு வரும் சின்ன சின்ன மாற்றங்கள்(Home decoration) செய்வதன் மூலமாக நிறைய பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வர முடியும். நம் வீட்டில் பாசிட்டிவ் வைப்ஸ் இருந்தாலே ஆரோக்கியம், செல்வம், வெற்றி எல்லாமே நமக்கு கிடைக்கும்.
1. வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக இருக்க வேண்டும் என்றால், எப்போதுமே நம் வீடு வெளிச்சதோடும், காற்றோட்டத்தோடும் இருப்பதுப்போல பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. வீட்டிற்குள் முதலில் நுழையும் போது கவனிப்பது வாசல் கதவை தான். அதை நன்றாக மங்களகரமாக கோலம் போட்டு அலங்கரித்து வைப்பது பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும்.
3. ஒரு உருளியில் தண்ணீர் விட்டு அதில் பூக்கள் வைத்து அலங்கரிக்கும் போது அழகாக இருக்கும். இதை 3 நாட்களுக்கு இப்படியே வைத்துக் கொள்ளலாம். இதனால் வீட்டிற்கு பாசிட்டிவ் வைப் கிடைக்கும்.
4. நல்ல வாசனைக்கு நம்மை உடனே மகிழ்ச்சியாக்கும் தன்மை உண்டு. அதை 'அரோமா தெரப்பி' என்று கூறுவார்கள். அதற்கு சாம்பிராணியை பயன்படுத்துவது சிறந்தது. இதையெல்லாம் செய்யும் போது கோயிலுக்குள் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
5. நம் வீட்டில் மோட்டிவேஷன் கோட்ஸ் மாட்டி வைக்கும் போது நாம் சோர்வாக உணரும் போது அதை படித்துப் பார்த்தால் ஒரு இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும்.
6. Positive affirmations என்பது நம் வாழ்வில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படும் விஷயங்களை ஏற்கனவே நடந்ததுப்போல எழுதி வைத்து அதை திரும்ப படித்துப் பார்க்கும் போது அந்த விஷயம் நடந்தால் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோமோ அந்த சந்தோஷத்தை மனதார உணர வேண்டும். இதை தொடர்ந்து நாம் செய்துக் கொண்டே வரும்போது நாம் ஆசைப்படும் விஷயங்கள் கண்டிப்பாக நிஜத்திலும் நடக்கும்.
7. வீட்டிற்கு வைத்து செடிகளை வளர்க்கும் போது அது நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை தரும். காற்றை சுத்தப்படுத்தி நல்ல ஆக்ஸிஜனை தரும். இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனநலத்திற்கு புத்துணர்ச்சியை தரும்.
8. நம் வீட்டில் உள்ள சுவர்கள் அழுக்காக இருந்தால் அது ஸ்ட்ரெஸ்ஸை தரும். ஆகவே சுவரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வீட்டிற்கு புதிதாக பெயின்ட் அடிக்கலாம். பிரைட்டான நிறங்களை தேர்ந்தெடுக்கும் போது பிரஷ்ஷான உணர்வையும், பாசிட்டிவிட்டியையும் தரும்.
9. நம் பர்னிச்சர்களில் உள்ள குஷன் அழுக்காக இருந்தால் அதற்கென்று குஷன் கவர்கள் கிடைக்கிறது. அதை பயன்படுத்தும் போது இது அந்த இடத்திற்கு ஒரு சுத்தமான உணர்வைத் தருகிறது.
10. நம் வீட்டில் மாட்டி வைக்கும் படங்களில் அழகான இடங்கள், விலங்குகள், பூக்கள் இப்படிப்பட்ட படங்களை தேர்ந்தெடுக்கலாம். தனிமையை குறிப்பது போல படங்களை மாட்டி வைக்கும் போது அது நெகெட்டிவ் வைப்பை தரும். எனவே படங்களை சரியாக தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
11. அலங்கரிக்க Artworks ஐ தேர்ந்தெடுக்கும் போது புத்தர் சிலையை தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல சாய்ஸ். புத்தர் சிலையை பார்க்கும் போதே நம் மனதிற்குள் அமைதி பரவும்.
12. வீட்டில் பைப் லீக் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பைப்பில் இருந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டேயிருப்பது நெகட்டிவ் எனர்ஜியை உண்டாக்கும்.
13. வாரம் ஒருமுறை மண் விளக்கை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கற்பூரத்தை சேர்த்து அதில் கொஞ்சமாக வெண்கடுகை சேர்த்து பற்ற வைத்து வீட்டில் காட்டுவது கண் திருஷ்டியை போக்கும்.
14. ஒரு கண்ணாடி கிளாசில் முழுவதுமாக தண்ணீரை ஊற்றி அதில் ஒரு கைப்பிடி கல் உப்பை சேர்த்துவிட்டு எழுமிச்சை பழத்தை போட்டு வீட்டினுடைய மூலையில் வைத்துவிட்டு ஒருநாள் முழுக்க விட்டுவிட்டு அடுத்தநாள் மாற்றிவிட வேண்டும்.
15. ஒரு எழுமிச்சைப்பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சள், இன்னொரு பாதியில் குங்குமம் தொட்டு அதை வாசலில் இரண்டு பக்கமும் வைப்பது திருஷ்டியை போக்குவதாக சொல்லப்படுகிறது.
16. 15 நாட்களுக்கு ஒரு முறையாவது வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்வதை ரொட்டீனாக வைத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் தொடர்ந்து செய்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.