
மனிதனின் வாழ்க்கை முறையை கைரேகைகள் வெளிப்படுத்துவதைப் போல, விரல்களின் அளவும் தீர்மானிப்பதாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்களின் இயல்பு, பழக்கவழக்கம், உடல் மொழி போன்றவற்றின் மூலம் வேறுபடுகின்றனர். ஒரு மனிதனை முதல் சந்திப்பிலேயே அவரை முழுமையாக புரிந்து கொண்டு, அவருடைய எண்ணங்கள், ஆளுமையை அறிய முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், ஜோதிடத்தில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு நபரின் ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
5 விரலும் ஓரே மாதிரியா இருக்கு என பலரும் கேட்பார்கள். அப்படி அந்த விரல்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியா இருக்கு என்றால் அது நிச்சயம் கிடையாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, உங்களின் சுண்டு விரல் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து உங்களின் குணாதசியங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...
குறிப்பாக உங்களின் சுண்டு விரலில் நீளத்தை பொறுத்து, ஒருவரின் முடிவு எடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுப்பார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியும் என ஜோதிடம் சொல்கிறது.
சரிசமமான சுண்டு விரல்:
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் கோடுடன் சரிசமமாக இருந்தால், நீங்கள் எப்போதும் சுய விழிப்புணர்வுடனும், ஒழுக்கத்துடன் இருக்கும் குணத்தை கொண்டிருப்பீர்களாம். உங்கள் ஆழ்மனதின் பேச்சை கேட்டு நடக்கும் குணம் பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் யாரும் உங்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது.
மோதிர விரலில் முதல் கோடுக்கு மேல் சுண்டு விரல்:
மோதிர விரலில் முதல் கோட்டை விட உங்களின் சுண்டு விரல் நீளமாக இருந்தால் நீங்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக திகழ்வீர்கள். மிகவும் உத்வேகத்துடன் செயல்படக்கூடிய திறனை கொண்டிருப்பிர்களாம். தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்க்கும் திறமையை கொண்டிருப்பார்கள்.
சிறிய சுண்டு விரல்:
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் கோட்டுக்கும் கீழ் இருந்தால், உங்களுக்கு சொந்த பலம் மற்றும் பலவீனம் தெரிந்து நடப்பீர்கள். மேலும் மற்றவர்களின் பலவீனத்தையும் சீக்கிரம் புரிந்து கொண்டு நடப்பவர்களாக திகழ்வீர்கள். அவர்களின் தேவைகளை ஆராய்ந்து அதை நிறைவேற்ற முயற்சி எடுப்பீர்கள். இந்த விரலை கொண்டிருக்கும் நபர்கள் மற்றவர்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்கள் மற்றவர்களை புரிந்து வாழ்வார்களாம்.