பல்லி வாஸ்து: வீட்டில் பல்லி இருப்பது நல்லதா கெட்டதா? வீட்டில் குட்டி பல்லிகளைப் பார்ப்பது ரொம்பவே நல்லதாம்!

Lizard vastu
Lizard vastu
Published on

நமது வீடுகளில் அடிக்கடி பார்க்கும் உயிரினங்களில் ஒன்று பல்லி. பலருக்கும் பல்லி பார்ப்பது அருவெறுப்பாக இருக்கும். ஏனென்றால் பல்லியின் தோற்றம் அப்படி. இருந்தாலும் பல்லிகள் வருவதை தடுக்கமுடியாது. இது ஒரு பக்கம் இருக்க, பல்லிகள் சகுனம் சொல்லும் என கூறப்படுகிறது. 'பல்லி கெவுலி சொல்லிற்று' என்ற சொல்லாடலை கேட்டிருப்போம். அப்படி வீடுகளில் பல்லி இருப்பது நல்லதா, கெட்டதா? வாஸ்து என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

பல்லிகள் பொதுவாக வீட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன. யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஜோதிடத்தில் பல்லி பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், பல்லியைப் பார்ப்பது சுபம் என்றும் சிலர் அசுபம் என்றும் கூறுகின்றனர்.

ஜோதிட நம்பிக்கையின் படி பல்லி மங்களகரமானதாகவே கருதப்படுகிறது. பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. சில மாநிலங்களில் புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு. ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்பப்டுகிறது. இவ்வளவு ஏன், தமிழகத்தில் பல்லிக்கு என தனி கோயில் உள்ளது!

அதுமட்டும் அல்ல, பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமம் என்பது ஐதீகம். அதாவது, முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் நமக்கு கிடைக்கும். அத்தத்துடன், அன்னை லட்சுமி தேவியும் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் கெட்டதாம்... உடனே தூக்கிப் போடுங்க..
Lizard vastu

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. தீபாவளி அன்று வீட்டில் பல்லி இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள்.

வீட்டில் ஒரே நேரத்தில் 3 பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாகவும், குட்டி பல்லிகளை பார்ப்பது மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. ஒரு வீட்டில் குடியேறும் போது உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால் அது நல்ல சகுணமாக கருதப்படுகிறது. இதனால் வீடுகளில் பல்லியை பார்த்தால் அதை விரட்டாமல் அதனால் ஏற்படும் நன்மைகளை நினைத்து மகிழ்ச்சியடையலாம்.

பொறுப்பு துறப்பு: ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்ட கட்டுரையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com