
சாமுஸ்திரிகா சாஸ்திரத்தின் படி ஒருவரின் மச்சம், விரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் மூலம் அவர்களின் ஆளுமையை தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. நமது கண்கள், இதழ்கள், தாடை, கையை பிடிக்கும் முறை, நிற்கும் நிலை, அமரும் பாணி என்று எல்லாமே நம்மை பற்றிய குணநலன்களை சொல்லும். ஆனால், கட்டைவிரல் வடிவங்கள் கூட நம் ஆளுமைப் பண்புகளைப் பற்றிய நுண்ணறிவை வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
மனிதர்களின் விரல்கள் பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு மாதிரி தான் இருக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு நேராகவும், பெரும்பாலான மக்களுக்கு வளைவாகவும் இருக்கும். இந்த 2 வகையில் தான் அனைவரும் அடங்குவார்கள்.
நீங்கள் எந்த வகை:
உங்கள் கட்டை விரல் thumpsup காட்டுவது போல் வைத்தால் கட்டை விரல் நேரானதா, அல்லது வளைவானதா என்பதை கண்டுபிடித்துவிடலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை போன்று உங்கள் கை விரல் பொருந்துகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நேரான கட்டை விரல்:
உங்களுக்கு நேரான கட்டைவிரல் இருந்தால், நீங்கள் பெரும்பாலும் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் பல தடவை யோசிப்பீர்கள். உங்களுக்கு சிறந்த தலைமைத்துவ திறன்கள் அல்லது வழிகாட்டுதல் திறன்களும் இருக்கும். இது தவிர வலுவான அதிகார உணர்வும் சுயகட்டுப்பாட்டும் இருக்கும். சாத்தியமான அச்சுறுத்தல்கள் அல்லது ஆபத்தை மதிப்பிடுவதில் உயர்ந்த உணர்வுடன் இருக்கவும் முனைவீர்கள். பகுப்பாய்வு மற்றும் கவனிப்பில் நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள். உங்களிடம் பிடிவாதம், உறுதியும், ஒழுக்கமும் இருக்கும். உங்களை விட நீங்கள் உங்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
வளைந்த கட்டை விரல்:
உங்களிடம் வளைந்த கட்டைவிரல் இருந்தால், நீங்கள் வெளிப்படையாகப் பேசும் ஆளுமை கொண்டவர்கள். உங்களிடம் கலைத்திறன் மிக அதிகமாகவே இருக்கலாம். வெளிப்பாட்டுத் திறனும் பச்சாதாபமும் உங்களிடம் அதிகமாக இருக்கும். உங்களுடைய உறவுகளை நீங்கள் எப்போதும் மதிப்பீர்கள். உங்கள் கலை நாட்டங்கள் உங்களை திறந்த மனதுடையவராகவும், ஆர்வமுள்ளவராகவும், புதுமையானவராகவும் ஆக்குகின்றன. தொழிலில் உங்கள் கவனம் குறைவாகவே இருக்கும். நீங்கள் தொழிலை விட உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.