
உணவு இன்றி கூட குறிப்பிட்ட நாட்கள் வரை வாழ்ந்து விட முடியும். ஆனால் தண்ணீர் இன்றி வாழ்வது மிகவும் கடினமானது. அப்படி நம் வாழ்க்கையில் அத்தியாவசிய தேவை தான் தண்ணீர். நம் உடலில் தண்ணீர் தான் அதிக தேவையாக பார்க்கப்படுகிறது. அதுவே வியர்வையாக வெளிவருவதால் குறைந்தது நாம் தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக வெயிலில் அதிக நேரம் செலவிடுவோர் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் கவனமாக இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. தண்ணீர் தேவையான அளவு உடலுக்கு செலுத்தாத போது பல ஆரோக்கிய பிரச்சனைகள் வரும். நம் உடலில் 60% வரை தண்ணீர் உள்ளது. அது உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்த, கழிவுகளை வெளியேற்ற, செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
வயதின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் எடுத்து கொள்ளும் அளவு மாறுபடும். அப்படி உங்கள் வயதிற்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் (1-8 வயது): இளமையில் குழந்தைகள் தினமும் 1.3 முதல் 1.7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் எடையை பொறுத்து மாறலாம்.
மாணவர்கள் (9-18 வயது): தினமும் சுமார் 2 முதல் 2.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வகுப்பில் கவனம், உடல் செயல்பாடு ஆகியவை நீர்அளவு குழந்தைகளுக்கான தேவைக்கு நேரடி தொடர்புடையவை.
வயது வந்தவர்கள் (18-60 வயது): பொதுவாக 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் தேவையாகும். அதிக உடற்பயிற்சி செய்வவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாக குடிக்க வேண்டும்.
மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலம்: பெண்கள் இந்த நேரங்களில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் – குறைந்தபட்சம் 3 லிட்டர் வரை.
முதியவர்கள் (60 வயதுக்கும் மேல்): நீரிழப்பு எளிதில் ஏற்படும். தினமும் 1.5 – 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
உடல் எடையைப் பொறுத்தும் மாற்றம்: ஒருவரின் உடல் எடையை அடிப்படையாக வைத்து, ஒரு கிலோ எடைக்கு சுமார் 30மி.லி. தண்ணீர் தேவைப்படுகிறது.
தண்ணீர் குடிக்கும் நேரமும் முக்கியம்: காலை எழுந்ததும், உணவுக்கு முன், உடற்பயிற்சிக்கு பிறகு, உறங்கும் முன் என சரியான நேரத்தில் குடிப்பது நன்மை தரும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.