அன்று சொன்னது; அர்த்தம் உள்ளது!

அன்று சொன்னது; அர்த்தம் உள்ளது!
https://thehealthsuite.co.uk

வீடுகளில் சமையல் செய்யும்போது, குறிப்பாக உலை கொதிக்கும்பொழுது அரிசி போடுவோம். அப்பொழுது ஏதும் பேசக்கூடாது என்று கூறுவர். இதுபோல், சிறு சிறு சம்பவங்கள் நடப்பதுண்டு. அப்படிக் கூறுவதில் உள்ள அர்த்தம் என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பேசாதே: உணவு தயார் செய்ய அரிசியைக் களைந்து அடுப்பில் இருக்கும் பானையில் போடும்போது. பேசக்கூடாது என்பது விதி. அரிசியை பானையில் போடும்போது ஐஸ்வர்ய தேவதை அங்கு வந்து சேர்வாள் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு.  அரிசியை போடும்பொழுது பேசினால் அந்த அர்ப்பணத்தை தேவதை ஏற்றுக்கொள்ளாமல் சென்று விடுவாள் என்று பெரியோர்கள் கூறுவது உண்டு. இதன் காரணம் என்னவென்றால் அரிசி போடும்போது பேசினால். ’வாயில் இருக்கும் அசுத்தம், அணுக்கள் முதலியவை எச்சில் மூலமாக அரிசிக்குள் படியலாம். இதைத் தவிர்ப்பதற்காக முன்னோர்கள் இந்த ஆச்சாரத்தை விதித்திருந்தனர்.

நெஞ்சில் கைகட்டித் தூங்கக்கூடாது: சிலர் தூங்கும்போது நெஞ்சில் கைகட்டி உறங்கும் பழக்கம் உள்ளது. இப்படி உறங்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. மேலே பார்த்து படுத்து இரு கைகளையும் நெஞ்சின் மீது சேர்த்து கட்டித் தூங்குவதால் இதய அசைவுகள் பாதிக்கும். இருதயத்துக்கு மேல் மிகையான அழுத்தம் ஏற்படும். இதனால் சுவாசத்துக்கு தடை ஏற்படலாம். இப்படி உறங்கும் பலருக்கும் இதய நோய் பாதிப்பு உண்டாவதாகக் கண்டறிந்துள்ளனர் என்கிறது அறிவியல்.

காலை ஆட்டாதே: சிலர் உட்கார்ந்து இருக்கும்போதும் படுத்து இருக்கும்போதும் கால்களை ஆட்டிக் கொண்டிருப்பது உண்டு. அதுபோல் செய்யக்கூடாது என்று கூறுவதை அனைவருமே கேட்டிருப்போம். இதன் காரணம் என்னவென்றால், இவ்வாறு செய்வது மனதுக்கு உறுதி இல்லாதவர்கள் செய்யும் செயல் என்று மனநூல் கூறுகின்றது. அதாவது, வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் இவ்வாறு செய்வது அவர்கள் மனம் ஒரு நிலைப்பட்டு நிற்காததே காரணம் என்கின்றனர். இதனால் இந்த பழக்கத்தை எப்படியும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
NOTA என்றால் என்னன்னு தெரியுமா?
அன்று சொன்னது; அர்த்தம் உள்ளது!

ஈரத் துணி தத்துவம்: கோயில்களில் குளித்து ஈரத் துணி உடுத்தி தரிசனம் செய்யும்போது பூரண பரிசுத்தம் மட்டுமே அதில் இருந்து கிடைக்கிறது என்று நினைப்பதுண்டு. ஆனால், ஈரத்துணி உடுத்தி கோயில் தரிசனம் செய்வதற்கான காரணம், ‘வயிற்றின் வெப்பத்தை குறைப்பதற்காகவே.’ நாம் உண்ணும் உணவிலும், குடிக்கும் நீரிலிருந்தும் நோய் அணுக்கள் மற்றும் விஷப் பொருட்கள் உள்ளன.

இவ்வகை விஷப் பொருட்களால் சிலருக்கு ஜீரணம் பாதிக்கப்படுகின்றது. சரியான ஜீரணம் நடக்காமல் இருப்பதால் வயிறு சுத்தமாவது தடைபடுகிறது. இதனால் வயிற்றுக்குள் வெப்பம் ஏற்படும். இதனால் பல நோய்கள் ஏற்படலாம். அப்பொழுது ஈரத் துணியுடன் கோயிலுக்குள் தரிசனம் முடித்தால் வயிற்றில் வெப்பம் குறைந்து வயிறு சரியாகும் என்பதால் இப்படி செய்கிறார்கள் என்கிறது மருத்துவம்.

இப்படி, அன்று சொன்னதன் அர்த்தத்தை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தால் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கி இருப்பதை புரிந்து கொள்ளலாம். இப்படிப் புரிந்து நடந்தால் புண்ணியம் கோடி பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com