கோடை வெப்பத்தைத் தணிக்கும் பல்வேறு மாநில பாரம்பரிய குளிர் பானங்கள்!

Shikanji cool drink
Shikanji cool drinkhttps://www.archanaskitchen.com

கோடையின் கடும் வெப்பத்திலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கும் தங்களின் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதற்கும்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர்களும் ஏதாவதொரு குளிர் பானத்தை அருந்துவதை அவசியமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் பாரம்பரியமாக எந்த பானத்தை அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பீகார் மாநிலத்தில், ‘சட்டு கா சர்பத்’ என்ற பானம் உடனடி சக்தி தருவதாகவும் சுவையானதாகவும் இருப்பதால் பலராலும் விரும்பி அருந்தப்படுகிறது. இது பொரித்த கடலைப் பருப்பு (Roasted Gram Flour) மாவுடன் சர்க்கரை, பிளாக் சால்ட், வறுத்து அரைத்த சீரகப்பொடி மற்றும் ஐஸ் வாட்டர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து பின் லெமன் ஜூஸ் மற்றும் புதினா இலைகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

‘ஷிகஞ்சி’ எனப்படும் பானம், அரை கப் எலுமிச்சை ஜூஸில் சர்க்கரை, ஐஸ் வாட்டர் சேர்த்து கரைத்து பின் பிளாக் சால்ட், வறுத்து அரைத்த சீரகப்பொடி மற்றும் ஆம்சூர் பொடி சேர்த்து, புதினா இலைகளால் அலங்கரித்தால் ரெடியாகும். இது டெல்லி, மீரட் போன்ற ஊர்களில் மிகவும் பிரபலம்.

குஜராத்தில் பிரபலமானது மசாலா மோர். இரண்டு கப் தயிரில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கடைந்து, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, பெருங்காயத் தூள், உப்பு, பிளாக் சால்ட், வறுத்து அரைத்த சீரகப்பொடி மற்றும் ஐஸ் க்யூப்கள் சேர்த்துக் கலந்து அருந்தும் பானமாகும்.

இதையும் படியுங்கள்:
தனிமையின் இனிய 9 பயன்கள் தெரியுமா?
Shikanji cool drink

சொல்காதி (Solkadhi) என்பது கோவா மக்களின் பாரம்பரிய பானம். பத்து உலர்ந்த கோகம் (Kokum) இதழ்களை ஒரு கப் சுடுநீரில் இருபது நிமிடம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை ஒரு கப் தேங்காய்ப் பாலுடன் சேர்த்துப் பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு நசுக்கிப் போட்டு உப்பு சேர்த்த பின் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் கிடைப்பது சொல்காதி. இதை ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிரூட்டி அருந்துவர்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய பானம் நீர் மோர். தேவையான அளவு தயிரில் தண்ணீர் சேர்த்துக் கலந்து மோராக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டி உப்பு சேர்த்தால் நீர் மோர் தயார். ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு குடித்தால் மேலும் இரண்டு கப் குடிக்கத் தூண்டும் எளிய சுவையான பானம் நீர் மோர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com