செய்யும் வேலையைப் பற்றி அறிஞர்கள் கூறிய 10 பொன் மொழிகள்..!

motivation articles
motivation articlesImage credit - pixabay
Published on

"உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உங்கள் வேலையை நேசியுங்கள், எளிமையாக வாழுங்கள். நமக்கு எவ்வளவு பிரச்னைகள் உள்ளது என்று கணக்கிடாதீர்கள். சிரமம் இல்லாமல் வாழ நமக்கு எவ்வளவு வழிகள் இருக்கின்றன என்பது பற்றிச் சிந்திக்க முயலுங்கள். நிகழ்காலத்தில்  வெற்றிகரமாக  வாழுங்கள். தீர்மானத்துடன் பிரச்னைகளை எதிர் கொள்ளுங்கள். திட்டமிட்டு வாழ்வதற்குரிய வழிகளிலேயே கவனம் செலுத்துங்கள். இதுவே உங்களுக்கு எப்போதும் புத்துணர்வை அளிக்கும்."

-ஜான்.ஏ.சின்ட்லெர்

உழைப்பு இது மட்டுமே உங்களை மற்றவர்களிடமிருந்து "பளிச்" என்று வேறுபடுத்திக் காட்டும். கடினமான வேலைகளைச் செய்வதில் சந்தோஷப்படுகிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். புகழ் பெற்றவர்கள் அனைவருமே இந்தக் குணத்தை வளர்த்துக் கொண்டவர்கள்தான்.

- விக்டர் ரைட்

"தினமும் உங்களுக்கு எந்த வேலையைச் செய்ய பிடிக்காதோ அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்றிரண்டை செய்ய பழகிக்கொள்ளுங்கள். நாளடைவில் அப்படிப்பட்ட வேலைகள் மீது  உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த வெறுப்பு மறையும், உங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்வதற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். "

- மார்க் ட்வைன்

"ஒரு வேலையை எப்படி தொடங்குகிறார்கள் என்பது முக்கியமானதுதான். எனினும் அதனை எப்படி முடிக்கிறீர்கள் என்பது தான் அதைவிட முக்கியமான தாகும். ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற வேகம் என்பது மன- உடல் வலிமையை விடக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் நிறைய முயல்களை உருவாக்குகிறோம் தவிர, நிறைய ஆமைகளை அல்ல."

- பி. சி. ஃபார்ட்ஸ்.

"எட்டு மணி நேரம் சேர்ந்தாற்போல் உங்களால் சாப்பிட முடியுமா? எட்டு மணி நேரம் குடிக்க முடியுமா? எட்டு மணி நேரம் காதலிக்க முடியுமா? ஆனால் வேலை செய்ய முடியும். சோகமான விஷயம் ஆனால் சத்தியம். ஒவ்வொரு பகலும் மனிதன் எட்டு மணி நேரம் செய்யக்கூடியது வேலை மட்டுமே. "

-வில்லியம் பாக்னர்

"ஒரு குறிப்பிட்ட வேலையை உங்களால் செய்ய முடியுமா? என்று யாரேனும் கேட்டால் " ஓ! நிச்சயமாக முடியும் " என்று சொல்லுங்கள். அப்படிச் சொல்லிவிட்டு அதை எப்படிச் செய்வது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

- தியோடர் ரூஸ்வெல்ட்

இதையும் படியுங்கள்:
மனதைப் பற்றிய சில தகவல்களும் - பொன் மொழிகளும்!
motivation articles

"ஒரே சமயத்தில் இரண்டு மூன்று வேலைகளைச் செய்ய முயலாதீர்கள். எது முதலில், எது பிறகு என்று ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான் வேறொரு வேலையைப் பற்றிக் கவலைப்படாமல் கையிலுள்ள வேலையைக் கவனிப்பீர்கள். "

- வில்லியம் பென்னட்

"எந்த வேலையானலும் அதை எவ்வளவு செய்தால் போதுமோ, அதற்கு மேலேயே கொஞ்சம் செய்யுங்கள். அடுத்துவரும் கஷ்டமான வேலைகள், குழந்தை விளையாட்டுபோல் சுலபமாக ஆகிவிடும்.

- ஹெச். கர்ட்டில்

"அவனுடைய வேலையை  நான் இன்னும் நன்றாகச் செய்வேன், இவனுடைய வேலையை  இன்னும் நன்றாகச் செய்வேன் என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்காமல். உங்கள் கையிலுள்ள வேலையை இன்னும் நன்றாகச் செய்யுங்கள்".

- ஹெர்பர்ட் ஷேன் பெல்டு.

" ஒவ்வொரு நாளும் காலையில் அந்தந்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு "நேர ஒழுங்கு" செய்யாதவன் எதையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத குழப்பவாதியாகி விடுகிறான். "

-ஹியூகோ

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com