motivation article
motivation articleImage credit -pixabay

மனதைப் பற்றிய சில தகவல்களும் - பொன் மொழிகளும்!

Published on

னம் என்பது சிந்தனை, நோக்கம், உணர்ச்சி’ மனஉறுதி, கற்பனை, போன்றவற்றில் வெளிபடுகின்ற அறிவு மற்றும் உணர்வு நிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பை காட்டுகிறது. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நம் கட்டுப் பாட்டில் உள்ளன. ஆனால் நம்மையே அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உறுப்பு மனம். நம்  மனதை ஆள முடிந்தால் நம்மால் இந்த உலகை கூட ஆள முடியும். இந்த உலகில் தோன்றிய எந்தவொரு கண்டு பிடிப்பும் ஒரு மனதில் தோன்றிய எண்ணங்களின் வருகையை. ஆகும்.

மனதை பற்றிய பொன்மொழிகள்;

1. உடல் உழைப்பு உடலைப் பலபடுத்துவதைப் போலவே சோதனைகளும் மனதை பலப்படுத்துகின்றன. -செனிக்கா

2. அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால் அனைத்தையும் நம் மனதால் மாற்ற முடியும். -கௌதம புத்தர்

3. மனிதர்களால் தங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும். -வில்லியம் ஜேம்ஸ்

4. உள்ளுணர்வு உள்ள மனம் ஒரு புனிதமான பரிசு, மற்றும் பகுத்தறிவு உள்ள மனம் ஒரு உண்மையுள்ள ஊழியர். நாம் மனமாகிய ஊழியரை மதித்து பரிசை மறந்து விட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

5. பயிற்சி மட்டுமே மனதின் சக்திகளையும், உடலின் சக்திகளையும் அவற்றின் பரிபூரண நிலைக்கு கொண்டு வருகிறது. -ஜான்லாக்

6. உங்கள் எண்ணங்கள் ஒன்றின் மீது மட்டுமே உங்களுக்கு முழுமையான கட்டுபாடு உள்ளது. இந்த தெய்வீக பரிசு தான் உங்கள் விதியைக் கட்டுப்படுத்தும். ஒரே வழி. உங்கள் மனதை கட்டுப்படுத்த தவறினால் நீங்கள் வேறு எதையும் கட்டுப்படுத்த மாட்டீர்கள். -நெப்போலியன் ஹில

7. கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவ தாகும். -மால்கம் ஃபோர்ப்ஸ்

8. தியானம் என்பது மனதை தூய்மை படுத்துவதற்கும், அமைதி படுத்துவதற்குமான ஒரு முக்கிய வழியாகும். -தீபக் சோப்ரா.

9. அன்பும், இரக்கமும் நிறைந்த இதயமே மனவலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும். -தலாய்லாமா

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
motivation article

10. யாருடைய மனம் தன்னை தானே கவனிக்கின்றதோ அவரே புத்திசாலி. -ஆல்பர்ட் காமுஸ்

11. கற்றலை நிறுத்தும் எவரும் இருபது அல்லது எண்பது வயதினராக இருந்தாலும் வயதானவர். கற்றலை தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள். வாழ்க்கையில் மிக பெரிய விஷயம் மனதை இளமையாக வைத்திருப்பது. -ஹென்றி ஃபோர்ட்

12. எல்லா பிரச்சனைகளும் மனதின் மாயைகளே. -எக்கார்ட்டோல்

13. மன அடிமைத்தனத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள் நம்மை தவிர வேறு யாராலும் நம் மனதை விடு விக்க முடியாது. -பாப் மார்லி

14. மனமே எல்லை. உங்களால்  எதையாவது செய்ய முடியும் என்ற உண்மையை மனம் கற்பனை செய்யும் வரை, நீங்கள் 100 சதவீதம் உண்மையிலேயே அதை நம்பும் வரை உங்களால் அதை செய்ய முடியும். -அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கா

15. உங்கள் சொந்த மனதை அறிந்து கொள்வதே எங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு மான தீர்வாகும். -தப்டன் யெஷே

மனதுடன் நடத்தும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டும் அல்ல. உறக்க நிலையிலும் கூட மனதில் போராட்டம் நம்மை விட்டு ஒரு போதும் நீங்குவதே இல்லை. அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள் ஆனால் மனதில் பட்டதை எல்லாம் பேசாதீர்கள். பிரிவுகளை தவிர்த்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com