
இந்த ஆண்டு, இந்தியா நம் தேசத் தந்தையின் 156 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. மேலும் இந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தனது அகிம்சை மற்றும் உண்மை (சத்யம்) கொள்கைகள் மூலமாகவே இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டார். அவர் ஒரு போதும் தன் கொள்கைகளை கடைபிடிக்க தவறியதில்லை.
மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத்தவிர வேறொன்றும் இல்லை என நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாக அறவழி போராட்டத்தை அவர் கடைபிடித்தார். இன்றைய இளைஞர்களுக்காக அப்போதே பல பொன்மொழிகளை கூறியிருக்கிறார் நம் தேசத் தந்தை. பார்க்கலாமா அவரின் முக்கியமான 10 பொன்மொழிகளை..
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
1. எது முழுமையானதாகவும், உண்மையாகவும் இல்லாமல் இருக்கிறதோ, அதை பெயர் சொல்லி அழைப்பதில் எவ்வித பலனும் இல்லை.
2. எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை, அந்த அறத்துக்கே உண்மை தான் அடிப்படை.
3. மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.
4. கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன்னுடைய குற்றங்களை மறைப்பவனே குருடன்.
5. வாழ்க்கையில் செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்வதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
6. மனதில் தீயவற்றை சிந்திப்பவன், தீயவற்றை செய்பவனுக்கு சமம்.
7. மற்றவர்களைக் கெட்டவன் என்று சொல்வதால், நாம் நல்லவராகி விட முடியாது.
8. அன்புள்ள இடத்தில் தான் இறைவன் இருக்கிறான்.
9. நீ எந்தவிதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அதை போலவே நீ மாறு.
10. பணிவு இல்லாத வாய்மை, செருக்கு இல்லாத கேலி சித்திரம்.
காந்தியின் கோட்பாடுகளை பின்பற்றுவோம்.. அகிம்சையையும், வாய்மையையும் கடைபிடிப்போம்!