Motivation image
Motivation imagepixabay.com

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் புத்தரின் 10 போதனைகள்!

Published on

கௌதம புத்தர். இவர் வாழ்வியலில் அன்பு, இரக்கம், சமாதானம், அமைதி என அனைத்தையும் போதித்தவர். இவரின் பொன்மொழிகளும் இவரின் போதனைகளும் இன்றும் போற்றுதலுக்குரியவையாக உள்ளன. புத்தரின் ஒவ்வொரு வரியிலும் மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். அவர் கூறிய மிக முக்கியமான பத்து போதனைகள் பற்றி பார்ப்போம்.

1. நிகழ் காலத்தை வாழ் - கடந்த காலத்தை நினைத்து அந்த நினைவுகளில் மூழ்கிப் போகாதே. எதிர்காலத்தை பற்றி நினைத்து கனவு காணவும் செய்யாதே. உனது மனதை நிகழ் காலத்தில் கவனம் செலுத்தவைத்து, அதை வாழ்.

2. வாய்மை சக்தி வாய்ந்தது - மூன்று விஷயங்களை அதிக காலம் மறைத்து வைக்கவே முடியாது. ஒன்று சூரியன், மற்றொன்று சந்திரன், மூன்றாவது உண்மை.

3. நேர்மறையாக யோசி - மனமே எல்லா செயலுக்கும் காரணம். நீ எதை சிந்தனை செய்கிறாயோ அதுவாகவே மாறுவாய்.

4. பின் வாங்காதே - கடந்த காலத்தில் ஒரு விஷயம் எவ்வளவு கடினமாக இருந்தது என்று எண்ணாதே. உன்னால் முடியும் என மீண்டும் துவங்கும்.

5. னியாக நட - ஆன்மிக பாதையில் உன்னை ஆதரிக்க யாரும் இல்லை உனக்கு தோன்றினால் தனியாக நட. முதிர்ச்சியில்லாத யாரையும் துணையாக கொள்ளாதே.

6. டுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே - உன்னுடைய நாக்கு கூர்மையான ஆயுதத்தை போன்றது. அது ரத்தம் இல்லாமல், காயம் இல்லாமல் ஒருவரைக் கொன்று விடும்.

7. னது உடம்பே உன்னுடைய சொத்து - உனது உடல் விலைமதிப்பில்லாதது. நாம் செயல்பட உதவும் கருவி அது மட்டுமே. அதை கவனமுடன் பார்த்துக்கொள்.

இதையும் படியுங்கள்:
இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?
Motivation image

8. கோபத்தைக் கட்டுப்படுத்து - நீ உனது கோபத்திற்கு உன்னால் தண்டனை கொடுக்க முடியாமல் போனால், அந்த கோபம் உனக்கு தண்டனை கொடுத்துவிடும்.

9. ரு போதும் கடந்ததை நினைக்காதே - பாம்பு தனது உடல் தோலை சட்டையை போல் நீக்குவதை போல் நாமும் நமது கடந்த கால நினைவுகளை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.


10. ன்னிடம் உள்ளதைக் கொண்டாடு - ஏற்கனவே தன்னிடம் உள்ளதை கொண்டாடவோ, பாராட்டவோ தவறுபவருக்கு ஒரு போதும் மகிழ்ச்சி என்பது வராது.

logo
Kalki Online
kalkionline.com