உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Motivation image
Motivation imagepixabay.com
Published on

மது வாழ்க்கையில் வழக்கமாக நிறைய விஷயங்களை சந்திப்போம். அப்போது நாம் அதை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதே அதன் விளைவை தீர்மாணிக்கும். அந்த வகையில் நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

தேவையை விட குறைவாகவே பேசுங்கள்:

ஒருவரிடம் நெருக்கமாக பழக உங்களுக்கு ஆசை இருக்கிறது என்றால், அதை பேச்சை விட செயலில் காமியுங்கள், அவர்களை எவ்வளவு பிடிக்கும் என்று. ஏனெனில் எதிரே உள்ளவர்களுக்கு உங்களுடைய பேச்சில் எது உண்மை எது பொய் என்பது தெரியாது. ஆகையால் உண்மையை கூட நாடகமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் அதிகம் பேசுபவர்களுக்கு முட்டாள் என்ற பட்டமே கிடைக்கும். முட்டாளாய் இருந்தாலும் குறைவாகப் பேசினால் அறிவாளி என்றே நினைப்பார்கள்.

வெளியே காட்டிக்கொள்ளாதீர்கள்:

உங்கள் உணர்வுகளை முதலில் வெளியே காட்டிக்கொள்ளாதீர்கள். ஒருவரிடம் நெருக்கமாகாமல் வெகுசீக்கிரம் உங்கள் உண்மையான உணர்வுகளை அவர்களிடம் வெளிப்படுத்தினால் கூட, அது அவருக்குப் பொய்யாகத்தான் தெரியும். ஆகையால் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

எதிரிகளை பயன்படுத்த தெரிந்துக்கொள்ளுங்கள்!

எதிரிகளை மட்டுமல்ல கெட்ட சூழ்நிலைகளையும் கெட்ட நேரங்களையும் எப்படி பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். அது மட்டும் தெரிந்தால் யாராலும் உங்களை பலவீனப்படுத்த முடியாது. அதேபோல் நண்பர்களை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.

மரியாதை மேல் வைக்கும் மதிப்பிற்கு எல்லை  உண்டு:

அனைத்திற்கும் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம். அதேதான் சுயமரியாதைக்கும் பொறுந்தும். ஏனெனில் உங்கள் சுயமரியாதையின் மேல் அளவுகடந்து அக்கறைக் காட்டும்போது அது உங்களை தவறானப் பாதைக்கும் அழைத்து சென்றுவிடும். எந்தெந்த விஷயங்களுக்கு சுயமரியாதையின் மேல் அக்கறை காட்ட வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

மரியாதைக் காக்க சில நேரம் மறைந்துவிடுங்கள்:

சிலருடன் நாம் எப்போதும் கூடவே இருந்தால் நமது அருமை புரியாது. நம்மை மட்டப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி சமையங்களில் சில காலம் யாருக்கும் தெரியாமல் தொலைதூரம் சென்றுவிடுங்கள். அப்போது உங்களுடைய அருமை அவர்களுக்குப் புரியும்.

இதையும் படியுங்கள்:
கலப்படமற்ற வெல்லம் வாங்குவது எப்படி?
Motivation image

உங்கள் திட்டத்தின்படி செல்லவில்லை என்றால் பரவாயில்லை:

உங்களுடைய திட்டத்தின்படி செல்லவில்லையென்றால் போறப்போக்கில் செல்லுங்கள். ஏனெனில் உங்களுடைய திட்டத்தைவிட கடவுளின் திட்டம் எப்போதும் சரியாகத்தான் இருக்கும்.

எல்லா விஷயத்திலும் சரியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை:

அனைத்து விஷயங்களும் நாம் நினைப்பது போல் நடக்காது. அதனால் அனைத்திலும் சரியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சில நேரம் குறைகளிலும் அழகு இருக்கும். அனைத்தையும் ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள்.

நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்;

அவசர அவசரமாக எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள். இது உங்கள் வேலைகளை நாசாமாக்கி விடும். எப்போதும் பொருமையை கடைப்பிடித்தீர்கள் என்றால் உங்கள் நேரம் வீணாகாது.

திட்டங்களை முடியுங்கள்:

எப்போதும் சிலருக்கு ஒரு வழக்கம் உள்ளது. ஒரு திட்டம் போட்டுவிட்டு அதனை முடிக்காமலேயே அடுத்த திட்டம் போட்டு அதன் வழியில் செல்வார்கள். அதற்கு காரணம் பயமாகவும் இருக்கலாம். மீண்டும் தொடர்வது அவசியம் தான். ஆனால் அதற்கு முதல் திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும். வெற்றியும் தோல்வியும் இரண்டாவது தான்.

உதவி செய்யுங்கள்:

ஒருவர் உதவி என்று கேட்டால் உங்களுடைய விருப்பத்தோடு அதைச் செய்யுங்கள். அவர்கள் மேல் பாவப்பட்டோ இல்லை நன்றிக்கடனை செலுத்துவதற்கோ உதவி செய்யாதீர்கள். அதில் எந்த பயனும் இல்லை. கடமையை முடிக்க வேண்டுமே என்று எண்ணி உதவி செய்தால் முடிவு எப்போதும் சரியாக இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com