
கோடீஸ்வரர்கள் பணத்துக்கும் புகழுக்கும் மட்டுமல்ல, அவர்களது மனநிலை, விடாமுயற்சி, மற்றும் தொலைநோக்கு பார்வைக்காகவும் அறியப்படுகிறார்கள். உலகின் வெற்றிகரமான மனிதர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 12 பாடங்களை இங்கே பார்க்கலாம்.
1. பில் கேட்ஸ்: மூளையே முதலீடு
வாழ்நாள் முழுவதும் புத்தகங்கள், வழிகாட்டிகள் மூலம் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். அறிவு என்பதே எல்லையற்ற வருமானத்துடன் கூடிய பெரும் முதலீடு . மூளை தான் மதிப்பு மிக்க சொத்து என்பது பில்கேட்ஸின் வாழ்க்கை பாடமாக உள்ளது.
2) வாரன் பஃபெட்: நீண்ட கால வளர்ச்சிக்கு மதிப்பு கொடுத்தல்
பிரபல அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட் பொறுமை, மதிப்பை புரிந்து கொள்வது மற்றும் திடீர் முடிவுகளை எதிர்ப்பது ஆகியவற்றை முதலீட்டு தத்துவமாக கொண்டு விரைவான வெற்றிகளை விட நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தி, செல்வத்தை பெருக்கிக் கொண்டார்.
3) எலான் மஸ்க்: ரிஸ்க் எடுத்தல்
ஆபத்துக் குறித்து அஞ்சாமல், எல்லைகளை தாண்டுவதில் பின்வாங்காமல், எப்போதும் தனது முடிவுகளை கவனமாக திட்டமிட்டு, ரிஸ்க் எடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பது எக்ஸ் குழும எலான் மஸ்கின் வாழ்க்கை தத்துவமாக உள்ளது.
4) மார்க் ஜுக்கர்பெர்க்: முக்கிய நோக்கத்தில் கவனம் செலுத்துதல்
முதன்மையான இலக்கை அடையாளம் கண்டு, கவனச் சிதறல்களை எதிர்த்து முக்கிய நோக்கத்திற்காக இணைந்திருப்பது மட்டுமே அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை வாழ்க்கை பாடமாக கொண்டுள்ளார் ஃபேஸ்புக்கின் மார்க் ஜூக்கர் பெர்க் .
5) ரிச்சர்ட் பிரான்சன்: புதுமைகளைத் ஏற்றுக் கொள்ளுதல்
துணிச்சலான யோசனைகள் மற்றும் கம்போர்ட் எல்லைக்குள் இருந்து வெளியேறி புதுமைகளை படைத்து, புதிய யோசனைகளைத் தழுவ வேண்டும் என்ற பாடத்தை கொடுக்கிறது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் குழுமம்.
6) ஜெஃப் பெசோஸ்: வாடிக்கையாளர் மதிப்பை பெறுதல்
வாடிக்கையாளரை ஆழமாகப் புரிந்து கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளை, பூர்த்தி செய்து திருப்தி அடைய செய்வது வணிக வெற்றிக்கு அடிப்படையாகும் என்று கூறுகிறார் அமேசானின் ஜெஃப் பெசோஸ்.
7) மைக்கேல் ப்ளூம்பெர்க்: சொத்துக்களை பன்முகப்படுதுதல்
முதலீடுகளாக இருந்தாலும், திறன்களாக இருந்தாலும், முயற்சிகளை பன்முகப்படுத்துவது வளர்ச்சி வாய்ப்புக்கு உதவும் என்கிறார் ஊடகம், நிதி சாம்ராஜ்யத்தை சேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க்.
8) கார்லோஸ் ஸ்லிம்: உத்தி ரீதியான கூட்டாண்மைகளை உருவாக்குதல்
உலகின் பணக்காரர்களில் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், தனது வெற்றியின் பெரும்பகுதிக்கு வலுவான கூட்டாண்மைகளை அதாவது அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதே காரணம் என்று நம்புகிறார் .
9) லாரி எலிசன்: தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல்
ஆரக்கிள் நிறுவனத்தில் இணை நிறுவனர் லாரி எலிசன் கடந்த கால சாதனைகளிலேயே தேங்காமல் போட்டியில் தொடர தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார் .
10) ஸ்டீவ் ஜாப்ஸ்: வடிவமைப்பு சிந்தனை முக்கியம்
ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ், துல்லியமான விஷயங்களில் கூட கவனம் செலுத்துவது, வேலையின் செயல்பாடு, நேர்த்தியான தயாரிப்புகளை உருவாக்குவது உலகளாவிய அடையாளமாக மாற்றும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
11) செர்ஜி பிரின்: வெளிப்படை தன்மை
கூகிளின் இணை நிறுவனரான, செர்ஜிபிரின் ஆர்வத்தையும் புதிய அனுபவங்களுக்கான வெளிப்படை தன்மையையும் வளர்த்துக் கொள்வது சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்டுவதாக கூறுகிறார்.
12) சார்லி முங்கர்: விமர்சன ரீதியாக சிந்தித்தல்
வாரன் பஃபெட்டின் வலது கரமாக திகழும் சார்லி முங்கர், விமர்சன சிந்தனை மற்றும் முடிவுகளை எடுக்கும் முன் ஆழமாக சிந்திக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது வெற்றிக்கு உதவுவதாக கூறுகிறார்.
மேற்கண்ட 12 கோடீஸ்வரர்களின் வாழ்க்கையும் பாடமாக இருப்பதால் அதைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.