நம் வாழ்வில் பல்வேறு தருணங்களில் வெற்றி என்ற ஒன்றை நாம் அடைவதற்கு Consistency மிக முக்கியம். அதாவது தனிப்பட்ட இலக்குகளைப் பின்தொடர்வது, புதிய பழக்கங்களை உருவாக்கி செயல்படுத்துவது அல்லது தொழில் சார்ந்த விஷயங்களில் முயற்சி செய்வது போன்றவற்றில் நாம் தொடர்ந்து சீராக செயல்பட வேண்டும். இந்த விஷயம் மட்டுமே மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த பதிவின் வாயிலாக பெரும்பாலான நபர்களை விட நீங்கள் கன்சிஸ்டன்ட்டாக இருக்க உதவும் 12 உதவிக்குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
முதலில் நீங்கள் நிர்ணயம் செய்யும் இலக்கானது உங்களால் அடையக் கூடியதாகவும், தெளிவுடனும் இருக்க வேண்டும். ஏனெனில் உங்களது இலக்குகள் மீதான தெளிவு இல்லாதபோது, அதற்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாது. எனவே ஒரு பெரிய இலக்கை அடைவதற்கு, அந்த இடத்திற்கு கொண்டு செல்லும் சிறிய சிறிய இலக்குகளின் மீது கவனம் செலுத்துங்கள்.
எது உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். மேலும் நீங்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களை முழு கவனத்துடன் செயல்படுத்துங்கள்.
நீங்கள் உங்களது இலக்கை எப்படி அடையப் போகிறீர்கள் என்பதற்கான ஒரு வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதை எந்த சூழ்நிலையிலும் தினசரி கடைபிடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிடுங்கள்.
நீங்கள் எந்த செயல் செய்ய வேண்டுமானாலும், சுய ஒழுக்கம் மிக முக்கியம். சுய ஒழுக்கம் இல்லாமல் எதையுமே உங்களால் அடைய முடியாது. எனவே சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் நீண்ட காலத்திற்கு ஒரு செயலை செய்து வருகிறீர்கள் என்றால், அதை அவ்வப்போது கண்காணித்து அதன் நிலையைப் பற்றி அறிந்துகொண்டு மேற்கொண்டு செயலில் இறங்குங்கள்.
தோல்வியை ஒரு பாடமாக பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னடைவுகளால் துவண்டுபோய் உங்கள் நிலையை மோசமாக்கி விடாதீர்கள். அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக மாற முயற்சி செய்யுங்கள்.
கெட்ட விஷயங்களை விட்டொழித்து நேர்மறையான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தவறான எண்ணங்களிலிருந்து விடுபட்டு, அனைத்தையும் நேர்மறையாக பார்க்கும் மனநிலை மிக முக்கியம்.
உங்களுக்கு என்றாவது மோட்டிவேஷன் குறையும்போது, மன உறுதியுடன் இருங்கள். நீங்கள் ஒரு விஷயத்தில் 100% கொடுத்தால் நிச்சயம் அதற்கான பலன் உங்களுக்குக் கிடைத்தே தீரும்.
உங்களுக்கு ஆதரவளித்து உறுதுணையாக நிற்கும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான கருத்துக்களால் உங்களை கஷ்டப்படுத்தும் நபர்களை தூர விலக்குங்கள்.
தினசரி உங்களது செயல்கள் மீது கவனம் செலுத்தி, உங்களை சிறப்பாக மாற்றும் விஷயங்கள் என்னவென்பதைத் தெரிந்து செயல்படுங்கள். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதிய அளவு தூக்கம் மிக மிக முக்கியம்.
நேர மேலாண்மை ஒரு வேலையை தொடர்ச்சியாக செய்வதற்கு முக்கியமானது. நீங்கள் எதுபோன்ற விஷயத்தில் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக அகற்றுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்களது செயல்களை மதிப்பாய்வு செய்ய நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் எதிலெல்லாம் நேரத்தை செலவழித்தீர்கள், எதுபோன்ற சிறப்பான விஷயங்களை செய்தீர்கள் என்பதை எல்லாம் மதிப்பாய்வு செய்தால், மறுநாள் நீங்கள் உந்துதலுடன் அதே வேலையை மீண்டும் முயற்சிக்க உதவியாக இருக்கும்.
இந்த 12 விஷயங்களை பின்பற்றுவது மூலமாக, ஒரு தலை சிறந்த நபராக உங்களால் மாற முடியும். எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தொடர்ச்சியாக செய்வதற்கு இவை உங்களுக்கு பெரிதும் உதவும்.