டாக்டர் அம்பேத்கர் கூறிய அற்புதமான 15  போதனைகள் – நம் வாழ்வியல் பாடங்கள்!

Ambedkar
Ambedkar
Published on
  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள்; அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

  • மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த நற்பெயர் உனக்கு வேண்டாம்.

  • வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

  • ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதில் வாழும் பெண்கள் அடைந்த வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம்.

  • மாபெரும் இலட்சியத்தையும் வெற்றியையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

  • எவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

  • அறிவைத் தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடிவரும்.

  • உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.

  • பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான், சிங்கங்கள் அல்ல. சிங்கங்களாக இருங்கள்.

இதையும் படியுங்கள்:
ஒருவர் சும்மா இருந்தால் இப்படியெல்லாம் ஆகுமா?
Ambedkar
  • முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் அவை, 1) பொது ஒழுக்கம், 2) முன்னேற்றத்தில் சிரத்தை, 3) சிந்தனையில் மகத்தான புரட்சி.

  • வாழ்க்கை நீண்டதாக இருப்பதை விட உன்னதமானதாக இருக்கவேண்டும்.

  • மனதின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்.

  • மனதை பண்படுத்துவதே மனிதராய் வாழ்வதின் உச்சபட்ச இலக்கு.

  • அறிவு, நன்னடத்தை, சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

  • ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை. இதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com