ஒருவர் சும்மா இருந்தால் இப்படியெல்லாம் ஆகுமா?

Idle people
Idle people
Published on
  •  எந்த வேலையும் செய்யாமல் சில சமயம் சும்மா உட்கார்ந்திருப்பதே சுகமான அனுபவமாகத்தான் தோன்றும். 

  • சும்மா உட்கார்ந்து இருப்பது ஒன்றும் அப்படி சுலபமான வேலை இல்லை. எப்போதும் பரபரப்பாக இயங்குபவரிடம் ஒரு பத்து நிமிடம் சும்மா உட்காருங்கள் என்று சொல்லிப் பாருங்கள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய்விடுவார்கள்.

  • வீட்டில் இருப்பவர்கள்கூட நம்மை என்ன சும்மா வெட்டியா உட்காந்துட்டு இருக்க. ஏதாவது உருப்படியா வேலை செய்யலாம் இல்ல என்று கூறும்போதும் நமக்கு சுறுசுறுப்பாக எழுந்து எந்த வேலையும் செய்ய மனசும் ஒப்பாது, உடம்பும் இடம் கொடுக்காது. ‘என்ன வேலையை வெட்டி முறிச்சிட்டனு இப்படி உட்கார்ந்துகொண்டே பொழுதை ஓட்டுற’ என்று கூறினால்கூட நமக்குள்ள ஒரு சலிப்பு மனநிலையில். அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு யோகிபோல் அமர்ந்திருப்போம்.

  • சும்மா இருப்பதே சுகம். இதன் அர்த்தம் சோம்பேறியாக ஒருவேலையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதல்ல.  தாயுமானவர் சுவாமிகள் சும்மா இருப்பதே சுகம் என்று தன் பாடலில் மௌனத்தை போற்றுகிறார். சும்மா இருப்பதே சுகம் என்பதன் பொருள் மனதில் எண்ணத்தை சுமக்காமல் இருப்பதே சுகம் என்பதாகும்.

  • இப்படி எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கும்போது நம் மனம் பல விஷயங்களை யோசிக்கும். இதனால் பல புதிய சிந்தனைகள் உருவாகும். மன அழுத்தம் குறையும். மன சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும். அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

  • இப்படி சும்மா அமர்ந்திருக்கும் போதுதான் நமக்குள்ள பிரச்னைகளை புதிய பரிணாமத்தில் அணுகத் தோன்றும். பிரச்னைக்கான ஆணிவேர் என்ன என்பது புரியவரும். நிதானமாக அமர்ந்து சிந்திக்கும்போதுதான் புதுப்புது எண்ணங்கள் தோன்றவும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனை நிதானமான முறையில் அணுகவும், தீர்வு காணவும் முடியும்.

இதையும் படியுங்கள்:
‘எனக்கு ஏற்ற வேலை எது?’ என்று தேடுபவரா நீங்கள்? உடன் இங்கே அணுகவும்!
Idle people
  • எப்போதும் பரபரப்பாக காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் நம்மால் நம்மைப் பற்றியோ, நம்மைச் சுற்றி நடப்பதை பற்றியோ அதிகம் சிந்திக்க தோன்றாது. நேரம் இருக்காது. எனவே, எந்த வேலையும் செய்ய பிடிக்காமல் சலிப்பாக இருக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அமைதியாக சில மணி நேரங்களை கழிக்க அடுத்து என்ன செய்யலாம் என்ற தேடல் உண்டாகும்.

  • 'சும்மா இருப்பதே சுகம்' - இங்கு சும்மா என்பதற்கு அமைதியாக இருப்பது சுகம் என்று பொருள். நம் வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் எதுவென்றால் அது ‘சும்மா’தான். வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கும் நபரிடம் சும்மா நிக்காதே என்றும், எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவரிடம் சும்மா பேசி திரியாதே என்றும் கூறுவதைப் பார்க்கலாம்.

  • நம் மனம் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும். ஆங்கிலத்தில் இதனை சாட்டர் பாக்ஸ் (chatterbox) என்று கூறுவார்கள். நாம் மௌனத்தில் இருந்தாலும் அது பாட்டுக்கு ஏதாவது மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கும்.

  • காற்றை அடக்கலாம்; கடலைக் குடிக்கலாம்; இந்த உலகத்தையே வென்று விடலாம். ஆனால், இந்த மனதை மட்டும் ஒன்றும் செய்யமுடியாது. இன்று உலகம் முழுவதும் மூக்கை பிடித்து மூச்சுப் பயிற்சி, தியான பயிற்சி செய்வதெல்லாம் இந்த மனதை அடக்கவே.

சும்மாதான் இருந்து பாருங்களேன். மனதில் அமைதி எவ்வளவு குடிகொள்ளும் என்பதை! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com