பிரேக்கப் வலியில் இருந்து தப்பிக்கணுமா.. இந்த 15 பொன்மொழிகளை மட்டும் படிங்க போதும்!

15-inspiring-quotes
15-inspiring-quotes
Published on

காதல் பிரேக்கப் ஆகும்போது ஏற்படும் வலி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு கொடுமையானது. பலரும் அந்த வலியில் இருந்து மீண்டு வர முடியாமல் தங்களின் எதிர்காலத்தையே இருட்டாக்கிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நபர் இல்லை என்றால் நமது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற மாயையில் இருந்து முதலில் நாம் கட்டாயம் வெளியே வர வேண்டும். 

உங்களின் உடைந்த இதயத்தை ஒட்டவைத்து, புதிய நம்பிக்கையோடு வாழ்க்கையை மீண்டும் சந்தோஷமாகத் தொடங்க உதவும் பதினைந்து சூப்பரான மோட்டிவேஷன் வரிகளைப் இப்போது பார்ப்போம்.

காதல் தோல்வியிலிருந்து மீட்கும் 15 வரிகள்!

  1. "Sometimes good things fall apart so better things can fall together." சில நேரங்களில் நல்ல விஷயங்கள் முடிவுக்கு வருவது, அதைவிட மிகச் சிறந்த விஷயங்கள் உங்களை வந்தடைவதற்காகவே.

  2. "Pain makes you stronger, tears make you braver, and heartbreak makes you wiser." வலி உங்களை வலிமையாக்குகிறது, கண்ணீர் உங்களை தைரியமாக்குகிறது, காதல் தோல்வி உங்களை புத்திசாலியாக மாற்றுகிறது.

  3. "Don't cry because it's over, smile because it happened." ஒரு விஷயம் முடிந்துவிட்டதே என அழ வேண்டாம், அது உங்கள் வாழ்க்கையில் ஒரு அழகான தருணமாக நடந்ததே என நினைத்து புன்னகை செய்யுங்கள்.

  4. "Every end is a new beginning." ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய அற்புதமான தொடக்கமே ஆகும்.

  5. "You can't start the next chapter of your life if you keep re-reading the last one." கடந்த கால பக்கங்களையே மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை உங்களால் தொடங்கவே முடியாது.

  6. "Sometimes you have to accept the truth and stop wasting time on the wrong people." சில நேரங்களில் நாம் உண்மையை ஏற்றுக்கொண்டு, தவறான மனிதர்களுக்காக நேரத்தை வீணாக்குவதை உடனே நிறுத்த வேண்டும்.

  7. "Let it hurt, let it bleed, let it heal, and let it go." காயப்படட்டும், வலிக்கட்டும், அதுவாகவே ஆறட்டும், பின்னர் அதை அப்படியே கடந்து செல்லுங்கள்.

  8. "The best revenge is moving on and getting over them." அவர்களை மறந்து உங்களின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதே அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பதிலடி.

  9. "Stars can't shine without darkness." காரிருள் இல்லாமல் நட்சத்திரங்களால் ஒருபோதும் பிரகாசமாக ஜொலிக்க முடியாது.

  10. "What is coming is better than what is gone." உங்களை விட்டு சென்றதை விட, எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்கள் மிகவும் அற்புதமானவை.

  11. "Someday you're gonna look back on this moment of your life and be so glad you didn't give up." என்றோ ஒரு நாள் இந்த கடினமான காலத்தை திரும்பிப் பார்த்து, நீங்கள் துவண்டு போகாமல் இருந்ததற்காக மிகவும் பெருமைப்படுவீர்கள்.

  12. "If they were stupid enough to walk away, be smart enough to let them go." உங்களை விட்டு விலகிச் செல்லும் அளவுக்கு அவர்கள் முட்டாளாக இருந்தால், அவர்களை தடுத்து நிறுத்தாமல் வழியனுப்பும் அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருங்கள்.

  13. "Healing takes time, and asking for help is a courageous step." காயங்கள் ஆறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும், அந்த நேரத்தில் பிறரின் உதவியை நாடுவதும் ஒரு வகையான தைரியம் தான்.

  14. "You are enough, just as you are." நீங்கள் நீங்களாகவே இருப்பது தான் உங்களின் மிகப்பெரிய பலம்.

  15. "A broken heart is just the growing pains necessary so that you can love more completely when the real thing comes along." உடைந்த இதயம் என்பது ஒரு வளர்ச்சிக்கான வலி மட்டுமே, உண்மையான அன்பு உங்களை தேடி வரும்போது இது உங்களை இன்னும் முழுமையாக காதலிக்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை ஒரு எலிப்பொறி போன்றது! நாம் வைக்கும் பொறியில் நாமே சிக்காமல் இருப்பது எப்படி?
15-inspiring-quotes

பிரேக்கப், வாழ்க்கையின் ஒரு சின்ன புள்ளி மட்டுமே. அதை நினைத்து உங்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் வீணடிப்பது கொஞ்சம் கூட புத்திசாலித்தனம் கிடையாது. உங்களுக்கு துரோகம் செய்தவர்களை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட்டுவிட்டு, உங்களின் லட்சியங்களை நோக்கி வேகமாக ஓடத் தொடங்குங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com