பொன்னான 15 புத்தர் மொழிகள்...! வாழ்க்கைக்கான நல்வழி பாடங்கள்!

புத்தர்...
புத்தர்...
Published on

1. நம் பிரச்னைகளுக்குக் காரணமே, போதிய நேரமிருக்கிறது என்று எண்ணுவதுதான்.

2. எதற்காகவும் அவசரப்படாதீர்கள், நேரம் வரும்போது தானாகவே அது நடந்தேறும்.

3. அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.

4. எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்.

5. இவ்வுலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி 'ஆசைதான்'.

6. மகிழ்ச்சியின் பாதையை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது, காரணம் மகிழ்ச்சி என்பதே பாதைதான்.

7. எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு மட்டுமல்ல; உனது சொல்லுக்கும் உண்டு.

8. நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்.

9. விழுதல் என்பது வேதனை. விழுந்த இடத்தில், மீண்டும்
எழுதல் என்பது சாதனை.

10. உன்னை யாரேனும் நிராகரித்தால் கவலை கொள்ளாதே. ஏனெனில், இந்த உலகில் விலையுயர்ந்த பொருட்களை வாங்க இயலாமல் நிராகரிப்பவர்களே அதிகம்.

இதையும் படியுங்கள்:
ஆந்திரா ஸ்பெஷல் பேப்பர் ஸ்வீட் பூதரெகுலு ரெசிபி!
புத்தர்...

11. உணர்வோடு இருப்பதைப்போலவே, அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

12. எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள். ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே.

13. ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு.

14. தவறு என்றால் ஒப்புக்கொள்ளுங்கள். சரி என்றால் மவுனமாக இருங்கள்.

15. சரியாக இருக்க முடியவில்லையே என்று வருத்தப்படாதே... நேர்மையாக இருக்க பழகிக்கொள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com