தொழிலாளர் தினம் - 'ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்கு சமம்' - சொன்னது யார்? 'உழைப்பு' பற்றி அறிஞர்களின் பொன்மொழிகள்!

தொழிலாளர் தினம் அல்லது மே தினமான இன்று `உழைப்பு’ பற்றி அறிஞர்களின் கூறிய பொன்மொழிகளை பார்க்கலாம்.
அண்ணாதுரை,அப்துல்கலாம்,தந்தை பெரியார்
அண்ணாதுரை,அப்துல்கலாம்,தந்தை பெரியார்
Published on

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் ‘மே’ தின நல்வாழ்த்துகள்.

தொழிலாளர் தினம் அல்லது மே தினமான இன்று 'உழைப்பு' பற்றி 15 அறிஞர்கள் கூறிய பொன்மொழிகள் இதோ...

* நமக்கு இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும், ஆனால் நமது உழைப்பு ஒருநாளும் வீண்போகாது - அறிஞர் அண்ணா

* ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு - எமர்சன்

* உழைப்பு, உடலைப் பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும் - பிளமிங்

இதையும் படியுங்கள்:
ஊக்கம் கொடுக்கும் 10 பொன்மொழிகள்!
அண்ணாதுரை,அப்துல்கலாம்,தந்தை பெரியார்

* உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் கடின உழைப்பு ஒன்று மட்டுமே தீர்வாக அமையும் - ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்

* விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் குழந்தையே வெற்றி - ஒரிசன் ஸ்வெட் மார்டென்

* மனஉறுதி மட்டும் இருந்தால் போதாது, அந்த உறுதியை போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால் தான் வெற்றிக்கு வழி வகுக்கும் - ஷெல்லி

* அடிமையைப்போல் உழைப்பவன், அரசனைப்போல் உண்பான் - கதே

* உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது - ராபர்ட் சப்ரிசா

* வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள். அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள் - வின்ஸ் லோம்பார்டி

* உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம் திட்டமிட்டபடி செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்களும் வெற்றியாளர்தான் - ஆபிரகாம் லிங்கன்

* சோம்பல், தீய பழக்கம், வறுமை ஆகிய தீமைகளை உழைப்பு களைகிறது - வால்டேர்

* அறிவு கொஞ்சமாக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் - எடிசன்

* உழைப்பதற்கு தயங்காத வரையிலும்.. பிழைப்பதற்கு தடங்கல் இருக்காது - இரா.பெரியசாமி

* ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்கு சமம் - தந்தை பெரியார்

* பத்து விரல்களும் பதறாது உழைத்தால், அஞ்சு விரலால் அஞ்சாது உண்ணலாம் - டாலிராண்ட்

இதையும் படியுங்கள்:
அறிஞர்களின் அர்த்தமுள்ள பொன்மொழிகள்..!
அண்ணாதுரை,அப்துல்கலாம்,தந்தை பெரியார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com