புத்தக வாசிப்பு பற்றி அறிஞர்கள் கூறிய 15 Quotes!

Book Reading
Book Reading

புத்தகம் படிப்பது சிலரின் பொழுதுபோக்காக இருந்தாலும், பலரின் முழு நேர வேலையாகவும் உள்ளது. அதேபோல் சிலர் புத்தகங்களே படிக்காமலும் இருக்கிறார்கள். நிறைய தத்துவவாதிகள் வாசிப்பின் அழகையும், மகிமையையும் பற்றி பல மேற்கோள்கள் கூறியுள்ளனர்.

அந்தவகையில் வாசிப்பு பற்றி அறிஞர்கள் கூறிய 15 தத்துவங்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

புத்தகம் வாசிப்பவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கையை வாழ்கிறான். ஆனால், வாசிக்காதவன் ஒரே வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான். – George R.R.Martin

எவ்வளவு வாசிக்கிறாயோ, அவ்வளவு தெரிந்துக்கொள்வாய். எவ்வளவு கற்றுக்கொள்கிறாயோ, அவ்வளவு பயணம் செய்வாய். – Dr. Seuss

புத்தகமில்லாத அறை என்பது, உயிரில்லாத உடலுக்கு சமம். – Marcus Tullicus Cicero

புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட. – Charles W. Eliot

பிரதிபலிக்காமல் படிப்பது என்பது, சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகாததற்கு சமம். – Edmund Burke

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதேபோல் மூளைக்கு படிப்பது. – Joseph Addison

புத்தகங்கள் - நீங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் கனவுகள். – Neil Gaiman

புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை. சிறந்த ஒருவருக்கு மட்டுமே அந்த புத்தகத்தின் அட்டையில் “ இது உங்களின் வாழ்க்கையையே மாற்றும்” என்று எழுதியிருக்கும். – Helen Exley

ஒரு புத்தக்கத்தை படிப்பது என்பது ஒரே ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது போல். – Diane Duane

ஆணோ? பெண்ணோ? யாராக இருந்தாலும், புத்தகத்தை விரும்பாதவர்கள், முட்டாள்களே. – Jane Austen

ஒரு நல்ல புத்தகம் கிடைப்பது, எனது வாழ்வின் ஒரு சிறப்பான நிகழ்வு.- Stendhal

இதையும் படியுங்கள்:
இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை... 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
Book Reading

புத்தகம் என்பது நம் ஆன்மாவின் கண்ணாடி. – Virginia Woolf

வாசிப்பது என்பது உட்கார்ந்த இடத்திலேயே பல இடங்களுக்குப் போக வைக்கும் ஒரு மாயாஜாலம். – Mason Cooley

புத்தகத்தை எரிப்பது ஒரு கொடூரம் என்றால், அதனைப் படிக்காதது அதைவிட மிகப்பெரிய கொடூரமாகும். – Joseph Brodsky

புத்தகத்தைப் போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை. – Ernest Hemingway

இந்த 15 மேற்கோள்களைப் படித்து புத்தக வாசிப்பின் மகிமையைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com