வாழ்வில் நம்பிக்கை தரும் சத்குருவின் 15 Quotes!

Sadhguru
Sadhguru

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும் சரி அல்லது சாதனைக்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களானாலும் சரி, எதோ ஒரு கட்டத்தில் ஒரு முறையாவது நம்பிக்கையின்மையை சந்திக்க நேரிடும். அந்த நம்பிக்கையின்மையிலிருந்து சில நேரத்தில் வெளிவந்தால், எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அந்த நம்பிக்கையின்மையிலேயே வெகுநாட்கள் இருந்தால், வாழ்வில் பெரிய தோல்விகளை சந்திக்க நேரிடும்.

நம்பிக்கையை இழந்து நின்றால் பரவாயில்லை, ஆனால் அதிலிருந்து வெளிவரும் சில யுக்திகளையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் வாழ்வில் நம்பிக்கை தரும் சத்குருவின் 15 மேற்கோள்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

 • யாருமே நீங்கள் குறைபாடற்ற சிறந்த மனிதராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால், இன்னும் சிறந்தவராக மாற நீங்கள் தொடர்ந்து முயல்கிறீர்களா என்பதே மிகவும் முக்கியமானது.

 • உங்களுக்குள் நீங்கள் சமநிலையுடன் இருக்கும்போது மட்டும்தான், உங்கள் புத்திசாலித்தனம், திறமை மற்றும் ஆற்றல் ஆகியவை முழுமையாக வெளிப்படும்.

 • உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது.

 • நீங்கள் எந்த அளவு வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்பது, உங்கள் உடலையும், மனதையும் உங்களால் எந்த அளவு சிறப்பாக பயன்படுத்த முடிகிறது என்பதைச் சார்ந்திருக்கிறது.

 • உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை. போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.

 • நீங்கள் எங்கிருந்தாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்தாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை அனுபவங்களை வீண்போக விடாதீர்கள்.

 • நீங்கள் கடந்தகாலத்தை நினைவுக்கூர்ந்திட முடியும், நிகழ்காலத்தை அனுபவித்து அதனை உணர முடியும், ஆனால் வருங்காலத்தை மட்டுமே விரும்பும்படி உருவாக்கிக்கொள்ள முடியும்.

 • தனிமனிதர்களிடத்தில் மாற்றம் ஏற்படாமல், உலகின் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

 • யோகா என்றால் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருப்பது. உடலளவில் மட்டுமில்லாமல் எல்லாவிதத்திலும். அப்படி இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும் நலமாக இருப்பீர்கள்.

 • சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான், மனிதர்கள் சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையைவிட மேன்மையான நிலைக்கு உயரமுடியும்.

 • மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை. உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் பயத்தை பலமாக்கினால் அச்சம் வேண்டாமே!
Sadhguru
 • உண்மையான உறவில் மட்டுமே, உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கவலைப்படாமல் உங்களால் முடிந்ததையெல்லாம் கொடுப்பீர்கள்.

 • உங்கள் வாழ்க்கையில் கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல.

 • விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது. உங்கள் விதியை நீங்களே உருவாக்கத் தவறும்போது அது தலைவிதியாகிறது.

 • மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.

இந்த 15 தத்துவங்களின் ஆழ்ந்த அர்த்தங்களைப் புரிந்துக்கொண்டால், இவை உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியில் உதவி, பெரிய மாற்றங்களை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com