உங்கள் பயத்தை பலமாக்கினால் அச்சம் வேண்டாமே!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

திர்காலத்தைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அது கடுகளவும் கைகொடுக்காது. உங்கள் எண்ணம்தான் உங்களுக்கு முதல் பயமே. என்ன நடக்குமோ என்று பயப்படுவதை விட நடப்பது நடக்கட்டும் என்று தைரியமாக இருந்து பாருங்கள், நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும். அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை. முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமில்லை. தன்னம்பிக்கை இருக்கும் வரை தோல்விக்கு இடமில்லை.

உங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் மனித இனத்திற்கே பெரும் சவாலாக உள்ள பயத்தை உதறுங்கள். அடுத்ததாக உங்கள் ஆழ் மனதுடன் பேசுங்கள். உங்களுக்கு எது தேவையோ அதைப் பெற்றுத்தா என்று அதனிடம் நம்பிக்கையுடன் கேளுங்கள். மூன்றாவதாக செயலில் இறங்குங்கள். நம்பிக்கையுடன் செயல்படுவதில் உறுதி காட்டும் பொழுதுதான் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும்.

உங்கள் பயத்தை வெல்வதே உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள குறுக்கு வழி எதுவும் இல்லை. பயத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எந்தவொரு  விஷயத்திலும் நீங்கள் ஆரம்பத்தில் தோல்வியை சந்திக்கலாம். பயப்பட வேண்டாம் உங்கள் பயம் உங்களுக்கு நன்மைதான் செய்கிறது. நமக்கு ஏற்படும் பயத்தில் நாம் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்க வெற்றிதான்.

உங்களின் பயம் உங்களுக்கு 10 நன்மைகளை செய்கிறது அது என்னவென்று பார்ப்போம்.

ஓரு புதிய செயலை செய்யும்போதோ, புதிய நிகழ்ச்சியில் பங்குபெறும் போதோ நம் மனதில் உள்ள பயம் பரபரப்பையும், ஆவலையும் தூண்டி விடுகிறது. இப் பரபரப்பும், ஆவலும் நம்முடைய உற்சாகத்தை அதிகரித்து வெற்றிக்கு வழி வகுக்கும்.

நம்மை ஒரு நாய் துரத்தும்போது நாம் மிக விரைவாக ஓடுகிறோமல்லவா? ஆபத்தான நிலையில் அதிலிருந்து தப்பிக்க சுவரை தாண்டி குதிப்பது, மரத்தில் மளமளவென்று ஏறுவது இவை போன்றவைகளை நம்மால் சாதாரண நேரத்தில் செய்ய முடியாது. ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் அதை செய்கிறோம். இப்படியாக பயம் நம் திறமையை வெளிப்படுத்த உதவுகிறது.

நம்மிடம் பயம் ஏற்படும்போது, சாதாரண சமயத்தில் செயல்படுவதை விட இருமடங்கு வலிமையுடன் செயல்பட முடியும். ஒரு தாயால் தன் குழந்தைகளுக்கு ஏதேனும் நிகழும்போது தன் சக்தியை மீறி அந்த தாயால் செயல்பட முடிவது இதனால் தான்.

இதையும் படியுங்கள்:
இந்த உயிரினங்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
Motivation Image

பயம் நம் ஐம்புலன்களையும் கூர்மையாக செயல்பட வைக்கிறது.

ஒரு நிகழ்ச்சியையோ, செயலையோ, சரியாகப் புரிந்துகொள்ள நம் மனதில் எழும் பயம் பயன்படுகிறது. என்ன நடந்து விடுமோ என்ற பயத்திலிருந்து விடுபட முதல் தேவை நடக்கப் போவதை கற்பனை செய்து பார்ப்பதுதான். அடுத்து என்ன நடக்கும் என்பதை மனதளவில் கற்பனை செய்து பாருங்கள் அதனைச் சமாளிக்க வழிகள் பிறக்கும்.

ஆபத்தை எதிர்நோக்கும் வண்ணம் நம்மை தயார் நிலையில் வைத்திருக்க பயம் உதவுகிறது. டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் என்ற அமெரிக்கா உளவியல் அறிஞர் கூறுகிறார். "மனிதர்களாகிய நாம் நம் சக்தியில் 10 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 90 சதவீதம் பயன்படுத்தப்படாமல் மறை சக்தியாக பயன்படத் தயாராக இருக்கிறது. அந்த மறைசக்தி நம்முடைய பயத்தினால் வெளிப்படுகிறது என்கிறார்.

நாம் அமைதியாக இருக்கும்போது புரியாத விஷயங்கள், நாம் பயப்படும்போது எளிதாக புரியும். மாற்று வழிகளைக் காண பயம் தேவையானது.

நம்மை உஷார்படுத்தி ஆபத்திலிருந்து காக்கும் எச்சரிக்கையாக பயம் செயல்படும்.

நமக்கோ, நம்மை சார்ந்தவர்களுக்கு ஆபத்து என்று வரும்போது, பயம் நமக்கு அசத்திய துணிவைத்தருகிறது.

நம் மனதில் இருக்கும் பயமே, வெற்றிக்கான நம்பிக்கையை அளிக்கிறது. சிறந்த நடிகர்கள், இசை கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சி எப்படி அமையுமோ என்ற பயம் மனதில் இருந்தது என்றும் அந்த பயமே நிகழ்ச்சி சிறப்பாக அமையக் காரணமாக இருந்தது என்றும் கூறுவர்.

பயத்தை பற்றி சரியாக புரிந்து கொண்டு அதை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பயத்தை பலமாக்குங்கள்  கவலையோ, பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கின்றது. நம்முடைய அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, மறுபாதி நம்பத்தகாதவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com