உங்கள் வாழ்க்கையை மோசமாக மாற்றும் 15 விஷயங்கள்! 

15 Things That Will Make Your Life Worst!
15 Things That Will Make Your Life Worst!

புது வருடம் தொடங்கிவிட்டது. உங்களில் பலர் வாழ்க்கையில் புதிய விஷயங்களைத் தொடங்க வேண்டும், புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து இந்த ஆண்டாவது எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என உந்துதலுடன் இருப்பீர்கள். ஆனால் இறுதியில் எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டிலும் எதையும் சாதிக்காமல் கடத்தி விடுவீர்கள். 

இது எதனால் நடக்கிறது? நாம் நிர்ணயம் செய்யும் இலக்குகளை ஏன் நம்மால் செய்து முடிக்க முடியவில்லை என எப்போதாவது யோசித்ததுண்டா? 

இதற்கு காரணம் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் நம் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றிய புரிதல் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், அப்படி நம் வாழ்வை மோசமாக்கும் சிலவற்றைத் தவிர்த்து, நம்முடைய இலக்குகளை எட்டிப் பிடிக்க முடியும் என்பதுதான். 

இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையை மோசமாகிக் கொண்டிருக்கும் 15 விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். 

 1. வெற்றி உங்களைத் தேடி வர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டு, எதையும் செய்யாமல் இருப்பது. 

 2. மிக முக்கிய செயல்களை உடனடியாக செய்யாமல் காலத்தைத் தாழ்த்தி, செய்யாமலே போவது. 

 3. உங்கள் வாழ்க்கை மோசமாக இருப்பதற்கு பிறரை குறை கூறுவது. 

 4. அதிகம் கோபப்பட்டு பிறரிடம் அடிக்கடி சண்டை போடும் மனோபாவம், உங்களிடம் எந்த நபரையும் நெருங்கவிடாது. 

 5. உங்களுக்கு எல்லாமே தெரியும் என நினைத்துக் கொள்வது. 

 6. உங்களுக்கே தவறு எனத் தோன்றும் விஷயங்களை கண்டு கொள்ளாமல், தொடர்ந்து செய்வது.

 7. உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே பூட்டிக்கொண்டு மேலும் மோசமாக்கிக் கொள்வது. 

 8. பிறர் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டு உண்மையை புரிந்து கொள்ளாமல் இருப்பது. 

 9. கடினமான விஷயங்களைக் கண்டு பயந்து ஓடுவது. இது உங்களுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் முடக்கிவிடும்.

 10. வாயில் மட்டும் அனைத்தையும் பேசிக் கொண்டு, செயலில் இறங்காமல் இருப்பது. 

 11. உங்களுடைய மகிழ்ச்சிக்காக பிறரிடம் கெஞ்சிக் கொண்டிருப்பது. 

 12. ஸ்மார்ட் போன், இணையம், சோசியல் மீடியா போன்று எளிதாக உங்களை திசை திருப்பும் விஷயங்களுக்கு அடிமையாவது.

 13. கமிட்மென்ட்களைக் கண்டு பயந்து கொண்டு, வாழ்க்கையை வெறுமையாகவே வாழ நினைப்பது. 

 14. தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது.

 15. வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களை நினைத்தும் அதிகமாக சிந்தித்துக்கொண்டு, கவலைப்படுவது. 

இதையும் படியுங்கள்:
சிவப்பு எறும்பு சட்னிக்கு ஏன் புவிசார் குறியீடு கொடுத்தார்கள் தெரியுமா? 
15 Things That Will Make Your Life Worst!

நம்மில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையை இந்த 15 விஷயங்கள்தான் கடினமான ஒன்றாக மாற்றிவிடுகிறது. எனவே இதை இப்போதே புரிந்து கொண்டு அதிலிருந்து மீண்டு, வாழ்க்கையை உங்களுக்கு ஏற்றவாறு மாற்ற முயற்சி செய்யுங்கள். 

நாம் முயற்சி செய்தால் எதில் வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com