அறிஞர்களின் பொன் மொழிகளில் உள்ள 15 அறிவுரைகள்!

 Golden Languages ​​of Scholars!
Motivational articles
Published on

ஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே - அது உன்னை கொன்று விடும்! கண்ணை  திறந்து பார் அதை வென்று விடலாம்!

 -அப்துல் கலாம்

சோர்ந்து விடாதீர்கள், வெற்றிக் களத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன! நம்பிக்கையுடன் முன்னேறில் செல்லுங்கள்!

-ரூதர் போர்டு

அறிவு என்பது நதியைப்போன்றது – அது எவ்வளவு ஆழமாக இருக்கிறேதோ – அந்தளவுக்கு அமைதியாக இருக்கும்!

- பெர்னாட் ஷா

நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் - இருளுக்கும் அஞ்சுவதில்லை!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக்கணக்கானவர்களை தன் வழிப்படுத்தினால் அவனுக்கு என்றுமே அறிவில்லை!

 -ஷேகுவாரா

பிறக்கும்போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும் போது உன்னோடு தான் இருக்கும் - அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு!

 -ஹிட்லர்

கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்!

-காரல் மார்க்ஸ்

நீ எதைத்தேடிக் கொண்டிருக்கிறாயோ அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!

இதையும் படியுங்கள்:
மன இறுக்கத்தைப் போக்கும் மகத்தான 17 யோசனைகள்!
 Golden Languages ​​of Scholars!

-ரூமி

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன்தான் மாமனிதன் !

வேர்வை சிந்தாத மனிதனாலும் – மை, சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது!

-ஷேகுவாரா

மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் – உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப்பெயர்  உனக்கு வேண்டாம்!

-அம்பேத்கார்

முடியும் என சொல்வது பெரிதல்ல - எதையும் முயன்று முடித்துக் காட்ட வேண்டும்!

-புரூஸ் லீ

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்கள்… எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்தது பொறுமை....

-மகாகவி பாரதியார்

நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு - நல்ல மனிதர்களின்  சாயலை அடைவாய் !

-வில்லியம் ஜேம்ஸ்

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன - ஆனால் அனுபவமோ  தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது!

-பில்கேட்ஸ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com