
மன இறுக்கம் என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. வீடு அலுவலகம் மற்றும் பல்வேறு விதமான இடங்களில் இருந்து நமக்கு வரும் அழுத்தங்கள் மன இறுக்கத்தை தருகிறது. மன இறுக்கத்தை எப்படி போக்குவது ரொம்ப சுலபம்.
கீழ்க்கண்ட 17 வழிமுறைகளை கடைபிடியுங்கள் உங்களை விட்டு மன இறுக்கம் விலகி மனமகிழ்ச்சியைத் தரும்.
1. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள்.
2. கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி பட்சாதாபப் படாதீர்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது கையில் இருக்கும் நிகழ்காலத்தை வெற்றியாக்குவதில் முழுகவனம் செலுத்துங்கள்.
3. நீங்கள் உங்களது வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு கவலைப்படாதீர்கள்.
4. உங்களை நிந்திப்பவர்களே உங்களுடைய நண்பர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடமிருந்து விலை எதுவும் பெறாமல் மனோதத்துவ மருத்துவரைப் போன்று உங்களது குறைகளின் பக்கம் உங்களின் கவனத்தைக் கொண்டு செல்கின்றார்கள்.
5. உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவரை மன்னித்து விடுங்கள், அதனை மறந்தும் விடுங்கள்.
6. அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகாண முயற்சித்து குழப்பமடைய வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு பிரச்னையை மட்டுமே தீர்க்க முற்படுங்கள்.
7. முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்களது கவலைகளை மறக்கக்கூடும்.
8. வரக்கூடிய பிரச்னைகளைப் பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் துக்கத்தை சுகமாக மாற்றம் செய்ய முடியும்.
9. எந்த பிரச்னைகளை உங்களால் மாற்ற முடியாதோ அதனைப் பற்றி சிந்தித்து துக்கப்படாதீர்கள். காலம் பொன் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
10. இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள். அவரவரது பாகத்தை சரியாக நடித்துக்கொண்டிருக்கின்றோம். எனவே பிறரது நடிப்பைப் பார்த்து கவலைப்பட வேண்டாம்.
11. பிறரை மாற்ற வேண்டும் என்ற இச்சையின் மூலம் மானசீக மன இறுக்கம் அதிகரிக்கின்றது. முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் இலட்சியம் வைப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
12. பொறாமைப்படுவதனால் மனமானது எரிகின்றது. ஆனால் ஈஸ்வரிய சிந்தனை செய்வதன் மூலம் மனம் அளவற்ற குளிர்ச்சியை அனுபவம் செய்கின்றது.
13. மகிழ்ச்சி கொடுப்பதன் மூலமே மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆகையால் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கும் சிந்தனையே செய்யாதீர்கள்.
14. பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ளும்பொழுது உங்களது கடந்த கால கர்மத்தின் கணக்குகள் (எதிர்மறையான வினைப்பயன்கள்) முடிந்து கொண்டிருக்கின்றது என்று நினையுங்கள்.
15. உங்களுக்குள் இருக்கும் சூட்சும அகங்காரத்தை தியாகம் செய்யுங்கள். வரும்பொழுது எதுவும் கொண்டு வரவில்லை. திரும்பும்பொழுதும் எதுவும் கொண்டு செல்ல மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
16. நீங்கள் உங்களது அனைத்து கவலைகளையும் பரமபிதா பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து விடுங்கள்.
17. தினமும் சிறிது நேரமாவது இறைவனை நினைவு செய்யுங்கள். யோகப்பயிற்சியினால் ஏற்படும் மன மற்றும் சரீர மாற்றமானது மன இறுக்கம் மற்றும் கவலைகளில் இருந்து விலக்கி ஆரோக்கியத்தை நல்கும்.