நா. முத்துக்குமாரின் 16 தலைச்சிறந்த வரிகள்!

Na.Muthu kumar
Na.Muthu kumar

தமிழ் சினிமா ரசிகர்களை தன் வரிகளால் கட்டிப்போட்டவர் நா. முத்துக்குமார். இசையையும் மிஞ்சும் வரிகளும், இசையுடன் சேர்ந்த அவரின் வரிகளையும் கேட்கும்போது, ஆஹா… அந்த நிம்மதி, ஆறுதல்… அப்படியிருக்கும்!! கிடைத்தற்கறிய அனுபவங்களை நமக்குக் கிடைக்கச் செய்தவர் நா.முத்துக்குமார்.

காதல், தாலாட்டு, வலி, அழுகை, ஆனந்தம் என நா. முத்துக்குமார் அவர்களின் வரிகள் பலருக்கு எனர்ஜி டானிக்காக இருக்கும். வார்த்தைகளை பூ மாலையாகக் கோர்த்து பாடல் எழுதுவதில் வல்லவர். இவர் எழுத்துக்களில் இருக்கும் சக்தியை நமக்கு அறியவைத்துவிட்டு, 'வந்த வேலை முடிந்தது' என்று வெகு சீக்கிரமாகவே மண்ணுலகைத் துறந்தார் முத்துக்குமார். அந்தவகையில் நா.முத்துக்குமாரின் முத்தான 16 வரிகளைப் பார்ப்போம்.

1. இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.

2. வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை.

3. கவலைப்படாதே… காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.

4. கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.

5. எல்லாம் எழுதிய பிறகும் ஏதும் எழுதாததைப் போல் தோன்றுகிறது. இதுதான் வாழக்கைப் போலும்.

6. காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பார்கள். அதை வாங்கிச் செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்.

7. 'நெருப்பு’ என்றால், நெருப்பு மட்டுமல்ல; நெருப்புக்குள்ளும் நீர் இருக்கிறது. அந்த நீர்... கண்ணீர்!

8.  இறந்துப் போனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்.

9. பெருமையடையாதே... பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்.

10. வாழ்க்கை எனும் நதி, மரணம் எனும் கடலில் கலக்கும் வரை, வெவ்வேறு மேடுப் பள்ளங்களில் ஓட வேண்டியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இலக்குகளை விரைந்து அடைய உதவும் 8 விதிகள்!
Na.Muthu kumar

11. தீயைப் படித்து தெரிந்துக் கொள்வதைவிட, தீண்டி காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும்.

12. மலரினும்  மெல்லியது காதல். அதனால்தான் நாம் அதை விற்றுக்கொண்டிருக்கிறோம்.

13. வலியதுதான் உயிர் பிழைக்கும். இதுவரையில் இயற்கையின் விதி அதுதான்…!

14.  புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன் எங்களிடமிருந்து பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.

15. ஒரு ராஜா வருந்தாமல், புத்தன் ஜனனம் இல்லை.
மனம் நொந்து நொறுங்காமல், சித்தன் பிறப்பதுமில்லை.

16. ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கிறான். ஒன்று அவன் வாழும் கதை. மற்றொன்று அவன் வாழ நினைக்கும் கதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com