இலக்குகளை விரைந்து அடைய உதவும் 8 விதிகள்!

இலக்குகளை விரைந்து அடைய உதவும் 8 விதிகள்!

கென்னத் பிளான்சார்ட் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் எழுதிய ‘’புதிய ஒரு நிமிட மேலாளர்’’ என்ற புத்தகத்தில் மிகக் குறைந்த காலத்தில் தெளிவான இலக்குகளை எப்படி அடைவது என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கி தங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

1. ஒரு நிமிட இலக்குகள்;

ஒரு நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர் இருவருக்கும் என்ன தேவை என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒரு நிமிட இலக்காக அமைக்க வேண்டும். தெளிவாக சுருக்கமாக அடையக்கூடிய இலக்குகளை அமைக்க வேண்டும். 25 அல்லது அதற்கும் குறைவான சொற்களில், ஒரு நிமிடத்தில் வாசித்து முடிகிற மாதிரி இருக்க வேண்டும். இது இருவருக்கும் தெளிவு சீரமைப்பு மற்றும் அதிகரித்த ஊக்கத்தை தருகிறது.

2. ஒரு நிமிட பாராட்டு;

சிறப்பாக வேலை செய்யும் நபர்களை பாராட்டி உடனடி மற்றும் குறிப்பிட்ட அங்கீகாரம் தரவேண்டும். இது ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதற்கும் நேர்மறையான பனிச்சூழலை வளர்ப்பதற்கும் அவசியம். ஒரு நிமிட பாராட்டுக்கள் நேர்மறையான ஊக்கத்தை தருகிறது மற்றும் பாராட்டு கலாச்சாரத்தை உருவாக்குகிறது. ஊழியர்கள் அந்த நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது நன்மை செய்திருந்தால் உடனே அதை  பாராட்ட வேண்டும். 

3. ஒரு நிமிடத் திருத்தம்;

பணியாளர்களோ அல்லது குழுவில் இருப்பவர்களோ ஏதேனும் தவறு செய்தால் அவற்றை நிவர்த்தி செய்ய உடனே முயற்சி எடுக்க  வேண்டும். சம்பந்தப்பட்ட நபரிடம் அந்தத் தவறை விவரித்து அதை சரி செய்ய வேண்டிய அவசியத்தை சொல்லவும். ஒரு நிமிடம் மட்டும் செலவழித்து அவர்களுக்கு அதை அழுத்தம் திருத்தமாக சொன்னால் போதும். அவர்கள் மிகவும் மதிப்பு மிக்கவர்கள். இந்த நிறுவனத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்  பேச்சு இருக்க வேண்டும். இந்த ஒரு நிமிட வழி மாற்றுதல் மேலும் ஏற்படும் சிக்கலை சரி செய்து முன்னேறு வதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.

4. பயனுள்ள தகவல் தொடர்பு

பயனுள்ள தகவல் தொடர்பை கடைப்பிடிக்க வேண்டும். தொழிலில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எப்படி நடந்தது என்று கேட்பதைவிட என்ன நடந்தது என்ற தெளிவாகக் கேட்க வேண்டும். ஏன் அப்படி செய்தாய் என்று கேட்பது ஆழமான புரிதலை அனுமதிக்கிறது. நேர்மறையான தகவல் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் பணியாளர்கள் தங்கள் பிரச்சனைகளை விவாதிக்க ஒரு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். தங்கள் கருத்தை ஒரு நிமிடமாவது அவர்கள் தெளிவாக சொல்வதற்கான வாய்ப்பு தர வேண்டும்.

5. பணியாளருக்கு அதிகாரம்

ஊழியர்கள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும். பணிகளை ஒப்படைத்து நிறுவனத்தின் இலக்குகளை அடைய தேவையான சுதந்திரத்தையும் முடிவுகளை எடுக்கும் உரிமையையும் அதிகாரத்தையும் அளிக்க வேண்டும். அதனால்  ஈடுபாடு அதிகரித்து உந்துதலோடு வேலை செய்வார்கள். ஒட்டுமொத்த உற்பத்தி திறனுக்கும் வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள மிக பிரபலமான காபி வகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க!
இலக்குகளை விரைந்து அடைய உதவும் 8 விதிகள்!

6. கேட்கும் சக்தி;

ஊழியர்கள் பேசும்போது குறிக்கிடாமல் எந்த விதமான தீர்ப்பும் வழங்காமல் அமைதியாக கேட்க வேண்டும். தாம் பேசுவதை மேலாளர் கேட்கிறார் என்பதே அவர்களுக்கு அவர் மேல் மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தும். அவர்களின் ஆதங்கம் மற்றும் தேவையைக் கேட்டறிவது மேலாளர் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் நல்லுறவை வளர்க்கிறது.

7. தொடர்ச்சியான முன்னேற்றம்;

ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இருவருக்கும் தொடர்ச்சியான கற்றல் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இது மாற்றி அமைக்கக்கூடிய பணிச்சூழலை உருவாக்குகிறது. அங்கு அனைவரும் கற்றுக் கொள்ளவும் வளரவும் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். 

 8. பணியிட கலாச்சாரம்;

ஒரு நெகிழ்வான பணியிட கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் தனிநபரின் தேவைகளுக்கு மற்றும் சூழ்நிலை களுக்கு ஏற்ப தலைமைத்துவ பாணியை சரி செய்ய வேண்டும். தேவைப்படும்போது தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் பணியாளர்களை முன்னிலைப்படுத்தி மேலாளர்கள்தான் பின் நிற்கும் நிலையை ஏற்படுத்த  வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com