பெண்கள் தங்கள் வாழ்நாளில் எந்தவொரு இடத்திலும் தடுமாறிவிடக் கூடாது என்பதற்காக எப்போதும் ஒரு துணை அமைத்து தரவே பெற்றோர்கள் நினைப்பார்கள். பிறந்த பின் தந்தை, கல்யாணத்திற்குப் பிறகு கணவன், கணவன் இறந்தப் பின் மகன் என அனைத்துக் காலங்களிலும் யாரயாவது சார்ந்து இருந்தே காலம் சென்றுவிடுகிறது. ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் ஒருவரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்க முடியுமா என்ன? முடியவே முடியாது.
ஒருவரை எதிர்பார்க்காமல் அந்த விஷயத்தை முடிக்க வேண்டும் என்றால் முதலில் நம்முடைய மதிப்பு மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். அதேபோல் தனிப்பட்ட சில விஷயங்களிலும் முறையாக இருக்க வேண்டும். அந்தவகையில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 16 விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. உங்களை வேண்டுமென்றே ஏமாற்றிய ஒரு மனிதரிடம் திரும்ப செல்லாதீர்கள். பின் அவர்களுக்கு குத்திப் பழகிவிடும். உங்களுக்கு குணமாகிப் பழகிவிடும்.
2. உங்களை சொற்களாலோ செயல்களாலோ அவமரியாதை செய்யும் எவரிடமும் மீண்டும் செல்லாதீர்கள். உங்கள் மேல் உள்ள மதிப்பு குறைந்தது என்றால் பார்க்கும் பார்வையும் மாறிவிடும். பார்வைக்கோணம் மாறினால், என்ன விளைவு ஏற்படும் என்பதே தெரியாது.
3. உட்கார்ந்துக் கொண்டே ஒருவரை கைகுலுக்கி வரவேற்காதீர்கள். உங்கள் மேல் ஒருவர் மரியாதை வைக்க வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் மேல் மரியாதை வைப்பது அவசியம்.
4. உங்களுக்குப் பிடித்தவரை ஈர்க்க வேண்டுமென்று உங்களைக் காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்குப் பிடித்த ஆளாக முதலில் நீங்கள் தான் இருக்க வேண்டும்.
5. கடைசி உணவை முடிக்கும் முன்னர் அடுத்த வேளைக்கான உணவு இருக்கிறதா என்று நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி நினைக்காமல் கடைசி உணவை சாப்பிட நினைக்காதீர்கள்.
6. உங்களுக்கென்று ஒரு லட்சியம் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் குடும்ப மானம் , மரியாதைகளின் பசிக்கு இறையாகிவிடுவீர்கள்.
7. உங்களுக்குப் பின் உள்ளவர்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு முன் உள்ளவர்களை மரியாதையாக நடத்துங்கள்.
8. ஒரு கேள்வி கேட்கும் முன்னர் 1 முதல் 3 வினாடிகள் வரை யோசியுங்கள். அதேபோல் ஒரு பதில் கூறும்போது அந்த கேள்வியின் அர்த்தத்தை ஆழமாக புரிந்துக்கொண்டு பதிலளியுங்கள்.
9. எந்த உறவையும் இருக்க சொல்லி மண்டியிடாதீர்கள். ஏனெனில் அந்த உறவு உங்களை விட்டு பிரிய ஒரு காரணத்தைத் தேடிக்கொண்டு என்றோ ஒரு நாளில் நிச்சயம் பிரியும்.
10. வாரத்திற்கு நான்கு நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் வலிமை மிகவும் முக்கியம்.
11. உங்களை ஒருவர் அழைக்கவில்லை என்றால் போகாதீர்கள். மற்றவர் மீதுள்ள பாசத்தை விட சுயஅன்பு மிகவும் முக்கியம்.
12. எங்கு சென்றாலும் கையில் பணம் வைத்துக்கொள்ளுங்கள். சில சமயம் அதுவே உங்களுடைய பாதுகாப்பு.
13. எந்த நிகழ்ச்சி என்றெல்லாம் பார்க்காதீர்கள். உங்களின் உடைகளில் கவனம் செலுத்துங்கள்.
14. ஒரு விஷயத்தை பாருங்கள், கவனியுங்கள், கேளுங்கள், ஆராயுங்கள் பின் முடிவெடுங்கள். அதேபோல் மற்றவரிடம் பேசும்போது கண்களைப் பார்த்து பேசுங்கள்.
15. முதலில் அதிகமாக சம்பாதித்து தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ளுங்கள். பின் லட்சியத்தைக் கட்டாயம் அடையளாம்.
16. ஒன்று உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் 'வேண்டாம்' என்று சொல்லிப் பழகுங்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை வேண்டாம் என்பதில் உறுதியாக இருங்கள்.