வாழ்க்கை தத்துவம் பேசும் வலை வீச்சுகள் 20!

motivation image
motivation imageImage credit - pixabay.com

* வாழ்க்கை கால்பந்து விளையாட்டுபோல! நீங்கள் ஒரு கோல். 10 பேர் உதவவும், 11 பேர் எதிர்க்கவும் செய்வார்கள்.

* கடவுள் எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டாரே என்று கவலைப்படாதே. ஒருவேளை வெளியே புயலாக இருக்கலாம்.

* புத்தகங்களை மூலையில் போடாமல் மூளையில் போடுங்கள்.

* வாழ்க்கையில் சந்தோஷங்களைவிட கஷ்டங்கள் நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன.

* கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.

* அர்த்தம் இல்லாமலும், சம்பந்தம் இல்லாமலும், பின் விளைவுகளை அறியாமலும், பேசுவதைவிட மவுனம் சிறந்தது.

* உதிர்ந்த இலைகள்தான் மரங்கள் வளர மீண்டும் உரமாகும். வாழ்க்கை துன்பங்களும் அதுபோலவே.

* அனைத்து துன்ப பூட்டுகளையும் திறக்க உதவும் திறவுகோல் அன்பு.

* குழந்தைங்க கெட்டுப்போறதே செல்ஃபோனால்தான். செல்ஃபோன் கெட்டுப்போறதே குழந்தைகளால்தான்.

* இழந்தால் சம்பாதிக்கக் கூடியது சொத்து, பணம். இழந்தால் சம்பாதிக்க முடியாதது நம்பிக்கையும், நாணயமும்.

* தீரப் போகும் சோப்பை புது சோப்போடு இணைத்து பயன்படுத்துவது நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கை.

*  சில நேரம் வழி தெரிந்தும் பயணிக்க முடிவதில்லை. ஆனால், பல நேரம் வழி தெரியாமலே பயணிக்கிறோம்.

* ஃப்ரிட்ஜில் வைப்பதில் மட்டுமல்ல. நட்புகளிலும்தான் புதிய வரவில் பழையதை மறந்துவிடுகிறோம்.

* கோடி வார்த்தைகளில் இருந்து துளித்துளியாய் சேமித்துக் கட்டப்பட்ட தேன்கூடு மவுனம்.

இதையும் படியுங்கள்:
தேங்காய்ப்பூவின் ஆரோக்கிய மகத்துவம்!
motivation image

* நொடி முள், நிமிட முள், மணி முள்ளின் ஓய்வில்லாத உழைப்பைக் காட்டத் தவறிவிட்டன டிஜிட்டல் கடிகாரங்கள்.

* ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள். அது தண்ணீராக இருந்தாலும் சரி, கண்ணீராக இருந்தாலும் சரி.

* படிக்கும்போது கணக்குக்காக பக்கத்தில் கடன் வாங்கியது வாழ்க்கையிலும் தொடர்கிறது.

* சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பங்கள் வெளியேறுகின்றன.

* குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டியது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையே. என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அல்ல.

* வயதான பிறகும் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் அனைவரும் வாழ்நாள் சாதனையாளர்களே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com