

ஒவ்வொரு வருடங்களைக் கடக்கும் போது, அதோடு நாமும் பல அனுபவங்களையும்,ஆறுதல்களையும், வெற்றிகளையும் சேர்ந்தே பெற்றுக் கொண்டு செல்கிறோம். அதேபோல் இனிவரும் 2026 புத்தாண்டுக்குள் நுழைவதற்கு முன் நம்மை இன்னும் மேலும் மெருகேற்றும் விதமாக இந்த ஏழு விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்கவும்,கற்றுக் கொள்ளவும் வேண்டும்..! அதைப்பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்..
வாழ்வின் முன்னேற்றத்திற்கு கடைபிடிக்க வேண்டிய 7 முக்கிய செயல்பாடுகள்..!
1. பகுதிகளாக பிரித்து ஆராய்தல் (Box strategy)!
ஒரு செயலை செய்வதற்கு முன்னால் சரியான திட்டமிடுதல் என்பது முக்கியமாகும். அதேபோல் அந்த செயலை எப்படி செய்து முடிக்கிறோம் என்பதும் முக்கியமாகும். ஒரு செயலில் தனது முழு ஆற்றலையும், முழு வீச்சில் காட்டாமல், சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு அதில் உங்களது கவனத்தையும்,ஆற்றலையும் செலவழித்தால் அந்த செயலை சீராகவும்,வேகமாகவும் முடிக்க முடியும்.
எ.கா: ஒரு குறிப்பிட்ட நிலத்தில் (ஒரு சென்ட்) புதர்கள் அடர்ந்துள்ளன. அந்த நிலத்திலுள்ள புதர்களை அகற்ற நாம் சிறு சிறு நிலப் பகுதிகளாக பிரித்து, அந்த பகுதிகளில் உள்ள புதர்களை அகற்றிக் கொண்டே வந்தால் முழுவதும் நம்மால் நிலத்தை சுத்தம் செய்து முடிக்க முடியும். அதை விட்டுவிட்டு நமது இஷ்டத்திற்கு அங்கும் இங்குமாக இருக்கும் புதர் செடிகளை வெட்டினால் நமக்குத்தான் வீணாற்றல் செலவாகும்..!
2. உணவுப் பூர்வமான செயல்கள்(Conscious actions)
எந்த ஒரு செயலையும் கடினமாக எதிர்கொள்ளாதீர்கள்..! அதற்கு மாற்றாக நமது உணவு பூர்வமான திறமைகளையும்,ஆற்றல்களையும் செயலில் காட்ட வேண்டும். முதலில் தோல்வி வந்தால் பிறகு, அந்த தோல்வியிலிருந்து என்ன தவறு செய்தோம்? என்பதை திருத்தி, அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் செயல்படுவது தான் இந்த உணர்வுபூர்வமான செயல்கள். அதேபோல் தவறுகளை எப்பொழுதும் மறைக்க பார்க்காதீர்கள்.. திருத்த பாருங்கள்..!
எ.கா: ஒரு சிறுகதை எழுத்தாளன் தனது முதல் கதையையும், நூறாவது கதையையும் ஒப்பிட்டு பார்க்கிறான்..! நூறாவது கதையானது முதல் கதையை விட, இலக்கண ரீதியிலும், மேம்பட்ட கதை ஓட்டத்திலும், எழுத்துப் பிழை இல்லாமலும் இப்படி பல கோணங்களில் உயர்ந்து இருந்தது. இது போன்று தான் நாமும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டும்.
3. பணத்தை துரத்துவதை நிறுத்துங்கள் (Stop chasing money)
பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பாதுகாப்பற்ற போலியான தகவல்களைக் கேட்டு, அந்த செயலை செய்யும் பொழுது நாம் மேலும் பணத்தை இழக்க வாய்ப்பிருக்கிறது. ஆதலால் நாம் நமது திறமையையும், தன்னம்பிக்கையையும் மட்டுமே நம்பி எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும்..! உழைப்பினால் கிடைக்கும் ஊதியமே சிறந்தது. அதேபோல் நம்மை மேலும் மெருகேற்றுவதற்கு நிறைய பல நல்ல தகவல்களை கற்றுக் கொள்ளவும் வேண்டும்.
4. ஒரே நேரத்தில் பல உத்திகளை கையாள வேண்டாம் (Avoid Multitasking)
ஒரு நேரத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தான் விரும்பிய தேர்ந்தெடுக்கப்பட்ட செயலை செய்யும் பொழுது, அதே நேரத்தில் மற்றொரு செயலையும் செய்து முடித்து விடலாம்! என்று நினைத்து செய்யும்போது, கடைசியில் நாம் எதிர்பார்த்த இரண்டு செயல்திட்டங்களும் கை கொடுக்காமல் போய்விடும். இதனால் நமக்கு தான் கூடுதலாக மன உளைச்சல் ஏற்படும்.
5. உங்களின் மீது நீங்களே முதலீடு செய்யுங்கள் (Invest in yourself)
ஒவ்வொருத்தரும் தங்களின் மீது முதலீடு செய்ய வேண்டும். முதலீடு என்றால் பணம் இல்லை.. அதற்கு மாற்றாக நல்ல பழக்கவழக்கங்களையும், சரிவிகித உணவு பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சிகளையும், அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு நாம் செய்யும் புத்தகம் வாசித்தல்,எழுதுதல் போன்ற செயல்களை நமக்குள் நாமே முதலீடு செய்ய வேண்டும்..! முதலீடு செய்தால் மட்டும் போதாது, பிறகு முதலீடு செய்யப்பட்ட செயல்களை நாம் முறையாக கடைபிடிக்கவும் வேண்டும்.
6. அனைத்தும் பரிபூரணமானவை (Everything is Perfection)
என்னிடம் இது போன்ற பொருள்கள் இருந்தால்தான் என்னால் இந்த செயலை முடிக்க முடியும்.. அதேபோல் வெற்றியும் பெற முடியும் என்று இருந்தால், நம்மால் ஒருபோதும் அந்த செயலை முடிக்க முடியாது. அதற்கு மாற்றாக நம்மிடம் எது உள்ளதோ அதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
ஓட்டப் பயிற்சிக்கு நல்ல உயர்ரக ஷூ தான் வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.. நம்மிடம் உள்ள சாதாரண ஷூவையோ அல்லது செப்பலையோ பயன்படுத்திக் கொண்டு ஓட்டப் பயிற்சியை செய்ய ஆரம்பிக்கலாம்.
7. முயற்சியின் வலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்(Accept the pain of effort)
முயற்சிகளின் போது வரும் வருத்தங்களையும், வலிகளையும் மனதார ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். கடினம் என்பது உடலுக்கு தானே தவிர மனதிற்கு அல்ல..! ஆதலால் எப்போதும் எதையும் தாங்கும் இதயமாக நம் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார் உனது இலக்கை அடையும் வரை..! உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலிக்கத்தான் செய்யும்.. ஆனால் அதுவே பிறகு உடலுக்கு பலமாக மாறுகிறது அல்லவா அது போல் தான், நமது வாழ்க்கையும்..!
வரப் போகின்ற இந்த 2026-ஆம் ஆண்டிலிருந்து நம்மை நாமே மேம்படுத்துவதற்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொள்ளவும், தேவையற்ற விஷயங்களை தவிர்க்கவும் வேண்டும். மேலே கூறியிருக்கின்ற இந்த ஏழு விஷயத்துல மட்டும் எப்பவும் கான்ஃபிடன்ட்டா இருங்க..! 2026-ல் நமக்கான வெற்றி நிச்சயம்..!