அன்பை அதிகமாக்கும் 3 தருணங்கள்!

3 Moments That Increase Love!
3 Moments That Increase Love!
Published on

'அம்மா என்றால் அன்பு. இன்னும் சுருக்கமாக கேட்டிருந்தால் நீ' என்று கூறி இருப்பேன் என்று ஒரு கவிதை படித்தேன். விருந்தினர் யாராவது நம் வீட்டிற்கு வந்து சென்றால், அவர்கள் வீட்டில் அன்பா பாசமா பேசினார்களா? என்று தான் கேட்பார்கள். அதுதான் மனித இயல்பு. இப்படி அன்பை அதிகமாக்கும் முக்கியமான மூன்று விஷயங்களை பற்றி இப்பதிவில் காண்போம். 

வாழ்த்து கூறல்: குழந்தைப் பருவத்தில் இருந்தே  நம் உறவினர் மற்றும் முக்கியமான நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் பிறந்த நாளை அவர்களிடம் சொல்லி வாழ்த்து சொல்ல கற்றுத்தர வேண்டும். முதலில் பெரியவர்களாகிய நாம் மிக நெருங்கிய உறவினர்களிடமும், அக்கம் பக்கத்தில் நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடமும் அவர்களின் முக்கியமான பிறந்த நாள், திருமண நாள் , பண்டிகை தினங்கள் போன்றவற்றை நினைவு கூர்ந்து வாழ்த்து கூறினோம் ஆனால் நம் குழந்தைகளும் நம்மை பின்பற்றுவார்கள்.

அந்த வாழ்த்து செய்தியை கேட்டவுடன் கேட்பவர்களுக்கு ஒரு சந்தோஷம் நிலவும். அதுவே அவர்களை அன்று முழுவதும் திக்குமுக்காட வைத்துவிடும். அதேபோல் எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத இடத்தில் இருந்து  நமக்கு ஒரு போன் வந்தால் நம் மனம் எவ்வளவு துள்ளி குதிக்கும். அப்படி அனுபவித்த தினங்களை நினைவு கூர்ந்து அதையே நாமும் பிறருக்கு கொடுக்கும் பொழுது அன்பு இறுக்கமாகும். 

நன்றி கலந்த பாராட்டு: எந்த வேலையை ஒருவர் சிறப்பாக செய்தாலும் அவருக்கு நன்றி கூறி, ஒரு பாராட்டை தெரிவித்து விட்டால் ,அடுத்த முறை அவர்கள் நாம் சொல்லும் வேலையை செய்ய அதிக அக்கறை காட்டுவார்கள். இட்ட வேலையை விடாமல் செய்து முடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் .அப்படி பாராட்டு கிடைக்கும் போது ஒருவரின் மனம் மகிழ்கிறது .பலரும் அடுத்தவர்களுக்கு சேவை செய்வதிலும் உதவி செய்வதிலும் நிறைவு பெறுகிறார்கள். இது தன்னலம் கருதாத உதவிதான். என்றாலும் இதற்கு அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்காமல் போனால் அவர்களின் மனம் சோர்ந்து விடும்.

உங்களுக்கு ஒருவர் சிறிதாக ஒரு உதவி அல்லது சேவை செய்தாலும் அதை மதித்து போற்ற வேண்டும். நீங்கள் செய்த செயல் தான் எனக்கு இந்த தருணத்தில் பெரிதும் கை கொடுத்தது என்று நன்றி சொல்லும் போது அவர்களின் மகிழ்ச்சி, இரட்டிப்பாகும்.  ஹோட்டலில் பரிமாறும் பேரர் மற்றும் ரயில் பயணங்களில் போது பெட்டியை சுமந்து வந்து தரும் போர்ட்டர் போன்றவர்களுக்கு புன்முறுவலுடன் ஒரு நன்றியை தெரிவித்து பாருங்கள் . அடுத்த முறை அவர்கள் நம்மை கவனிக்கும் விதமே வித்தியாசமாக இருப்பதை உணரலாம் .இது போன்ற தருணங்களில் அன்புமிளிரும். 

இதையும் படியுங்கள்:
அஞ்சலி: பிரபல ஸ்பின் பவுலர் 'டெரிக் அண்டர்வுட்'!
3 Moments That Increase Love!

மரியாதை: எந்த உறவிலும் மரியாதை மிக முக்கியம். உரிய மரியாதையை உரிய நேரத்தில் தரப்படாத எந்த உறவும் நீண்ட காலம் நீடிக்காது. நீங்கள் எந்த அளவுக்கு மரியாதை தருகிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இதனால் உறவு மேம்படும். உறவினர்களின் செயல்களை மனம் திறந்து பாராட்டுவதும் மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு வழி .நீங்கள் அடிக்கடி பாராட்டும் போது உங்கள் மீது மரியாதை கூடும். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் சிலரை நாம் ரொம்ப ஸ்பெஷலாக நினைக்கிறோம் அல்லவா?

அப்படி ஒருவரை நீங்கள் அன்பு கூர்ந்து பாராட்டும் போது அவருக்கும் நீங்கள் ரொம்பவே வேண்டப்பட்டவராக மாறி விடுவீர்கள். எந்த இடத்திலும் எந்த தருணத்திலும் உங்களுக்கு அடுத்தவர்கள் தரும் மரியாதை ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். அன்பு கூர்ந்து நீங்கள் தரும் மரியாதை இந்த உலகில் நிறைய நற்செயல்கள் நடைபெற காரணமாக இருக்கிறது. அதற்கு நீங்கள் ஓர் காரணமாக மாறுகிறீர்கள். இந்த அன்பு பல மாயங்கள் செய்கிறது. இது அனைவரையும் உயர்த்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com