அஞ்சலி: பிரபல ஸ்பின் பவுலர் 'டெரிக் அண்டர்வுட்'!

Derek Underwood
Derek Underwood

மேகம் சிறிது கருத்து மப்பும், மந்தாரமாக இருந்தால் ‘கூப்பிடு டெரிக் அண்டர்வுட்டை’!  கிரிக்கெட் மேட்ச்சில் ஸ்பின் பவுலிங் போடுவதற்கு என்று புகழ் பெற்றவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக டெஸ்டுக்கள் விளையாடியவர் டெரிக் அண்டர்வுட்.

முதல் தர கிரிக்கெட் விளையாடியது கென்ட் அணிக்காக.
இந்த இடது கை வீரரின் பவுலிங்கிற்கு மிக்க மதிப்பு அளித்தவர், சுனில் கவாஸ்கர். இவரது பவுலிங்கில் சில முறை அவுட்டும் ஆனவர்.

08.06.1945 அன்று பிறந்த டெரிக் அண்டர்வுட், நேற்று (15.04.24) இயற்கை ஏய்தினார்.

சிறந்த ஸ்லோ ஸ்பின் பவுலர். ஒரு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது அருமையான பவுலிங்கால் இங்கிலாந்து அணி வெற்றி பெற உதவினார்.

1968ஆம் ஆண்டு கடைசி தினம் லஞ்ச் சமயத்தில் மழை கொட்டி மைதானம் தண்ணீரில் மிதந்து சுமார் 75 நிமிடங்கள் மேட்ச் விளையாடும் நேரம் வீண் ஆயிற்று. இருந்தும் தனது சிறப்பான பவுலிங்கால், நான்காவது இன்னிங்சில் அண்டர்வுட் கிட்டத்தட்ட 32 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து 7 விக்கெடுக்கள் வீழ்த்தி அசத்தினார். இவரது அருமையான பவுலிங் பங்களிப்பு, இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் 226 ரன்களில் வெற்றி பெற பெரிதும் உதவியது.

ஜூலை, 1966ல் அறிமுக டெஸ்ட் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக விளையாடினார், நாட்டிங் lஹாமில். முதல் டெஸ்டில் விக்கெட்டுக்கள் எடுக்கவில்லை.
இவரது கடைசி டெஸ்ட் ஸ்ரீலங்காவிற்கு எதிராக கொழும்புவில். பிப்ரவரி 1982. இந்த டெஸ்டில் இவர் 8 விக்கெட்டுக்கள் எடுத்தார். 5 / 28 & 3 / 67. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்றது.

இதையும் படியுங்கள்:
SRH Vs RCB: சாதானைப் படைத்த ஹைத்ராபாத் அணி… போராடி தோற்ற RCB !
Derek Underwood

86 டெஸ்டுகளில் 297 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இவர்தான் இங்கிலாந்து அணிக்கு டெஸ்டுக்கள் விளையாடிய ஸ்பின் பவுலர்களில், இன்று வரை அதிக விக்கெடுக்கள் எடுத்த பெருமை பெற்றவர். பேட்டிங்கில் 937 ரன்கள் அடித்துள்ளார். பவுலிங்கில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எட்டு விக்கெட்டுக்களும், மேட்சில் 13 விக்கெட்டுக்களும் அதிக பட்சமாக எடுத்துள்ளார்.
1971ல் நியூஜிலாந்து அணிக்கு எதிரான கிரைஸ்ட் சர்ச் டெஸ்டில், இவர் எடுத்தது 12 விக்கெடுக்கள். 6 / 12. & 6 / 85. இங்கிலாந்து அணி வெற்றியைப் பதிவு செய்தது.
11 கேப்டன்கள் தலைமையில் டெஸ்டுக்கள் விளையாடி உள்ளார்.

20வது முறை இவரது பவுலிங்கில் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கியுள்ளார்.

26 ஒரு நாள் பந்தயங்களில் இவர் எடுத்த விக்கெடுக்கள் 32.
சஸக்ஸ் அணிக்கு எதிரான மழை சூழ்ந்த ஒரு மேட்சில் இவர் கென்ட் அணிக்காக எடுத்த அசத்தல் விக்கெட்டுக்கள் 8. கொடுத்த ரன்கள் 9.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com