
வருடா வருடம் உங்களுக்கு நீங்களே ஒரே மாதிரியான வாக்குறுதிகளை அளித்து சோர்வடைந்துவிட்டீர்களா? ஒவ்வொரு ஜனவரி மாதமும் பெரிய திட்டங்களுடன் தொடங்கி, பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அதே இடத்தில் உங்களை மறுபடியும் காணும் அனுபவம் உங்களுக்கு இருக்கா? இந்த 2025 வருடமும் அப்படித்தான் தொடங்கியதா? 4 மாதங்கள் ஓடிவிட்டனவே என்ற பதற்றமா?இனிமேலும் நின்று காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள் எதிரே இன்னும் 8 மாதங்கள் உள்ளன.
உங்களுடைய இந்த போக்கிற்கான காரணத்தை முதலில் பார்க்கலாமா?
1. சுய ஒழுக்கம்
சுய ஒழுக்கம் என்பது நீண்ட கால இலக்குகளை நோக்கி முன்னேறி குறுகிய கால சோதனைகளை எதிர்க்கும் முக்கியமான திறனாகும். இது கனவு காண்பவர்களையும், சாதனையாளர்களையும் பிரிக்கிறது. மேலும் இது பயிற்சியின் மூலம் நீங்கள் வளர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு திறமையாகும்.
சுய ஒழுக்கம் இல்லாமல், சிறந்த திட்டங்கள் கூட வெறும் கனவுகளாகவே இருக்கும். நீங்கள் சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளும்போது, அசௌகரியத்தைத் தாண்டிச் செல்லவும், தடைகளைத் தாண்டவும் மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் உங்களுக்கு சக்தி கிடைக்கும்.
சுய ஒழுக்கம் என்பது உங்களிடம் இருந்தாலும் சரி, இல்லையேன்றாலும் சரி, நீங்கள் காலப் போக்கில் கற்றுக்கொண்டு வலுப்படுத்தக்கூடிய ஒரு திறமை ஆகும்.
உதாரணத்திற்கு நீங்கள் பதவி உயர்வை வருடா வருடம் எதிர்பார்த்து கொண்டிருக்கலாம், ஆனால் வருடம் தான் செல்கிறது, நீங்கள் அதே position ல் இருக்கிறீர்கள், ஏன்? காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் உங்களுடைய இந்த self discipline ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
சில சமயங்களில் உங்களுக்கு எத்தனை செய்து என்ன லாபம் என்ற விரக்தி ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது நீங்கள் உங்களை அறியாமலேயே சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க தவறி விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கு இந்த வருடம் பிரமோஷன் கொடுக்க வேண்டும் என்று உங்கள் பாஸால் திட்டமிடப்பட்ட உயர்வும் பறிபோய் விடுகின்றன. ஆகவே சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிக அவசியம்.
2. பின் சென்ற ஆண்டுகளில் ஏன் தோல்வியடைந்தோம்?
உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராடியிருக்கலாம். அதற்கான motivation ம் இருந்திருக்கலாம். ஆனால் அந்த போராட்டமும் உந்துதலும் நிரந்தரமாக இல்லாமல் தற்காலிகமாக இருந்திருக்கும். ஆரம்பித்தில் மிகவும் உற்சாகமாக இருந்து விட்டு பின்னால் dull ஆக இருப்பது தான் தோல்விக்கான காரணமாகும். ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட முயற்சியை தினமும் சரி சமமாக செய்ய வேண்டும்.
கடந்த கால தோல்விகளுக்கு மற்றொரு பொதுவான காரணம், ஒரே நேரத்தில் அதிகமாக மாற முயற்சிப்பது. மன உறுதி என்பது நாள் முழுவதும் குறைந்துபோகும் ஒரு வரையறுக்கப்பட்ட வளமாகும். உங்கள் முழு வாழ்க்கையையும் ஒரே இரவில் மாற்ற முயற்சிக்கும்போது, நீங்கள் தோல்விக்கு உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் ஏன்று தான் அர்த்தம். எனவே தான் நீங்கள் முதல் இரண்டு மாதம் மட்டும் ஜோராக சில மாற்றங்களை செய்து விட்டு மறுபடியும் பழைய நிலைமைக்கே திரும்பி விடுகிறீர்கள்.
ஒரு இலக்கை அடைய நிதானமாக ஒரே சீரான நிலைமையை கையாண்டால் அந்த வருட இறுதிக்குள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
3. அளவுக்கு மீறிய இலக்கு
நாம் ஒரு இலக்கையோ அல்லது திட்டத்தையோ நிர்ணயிக்கும் போது நன்றாக யோசித்து நிர்ணயிக்க வேண்டும். பெரிய பெரிய திட்டத்தை தீட்டுவதால் ஒரே நாளில் பெரிய ஆளாக ஆகி விட முடியாது. நம்முடைய அறிவிற்கும் சக்திக்கும் ஏற்றவாறு தான் சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களை பார்த்து திட்டத்தை தீட்டக் கூடாது.
பெரியதாக திட்டத்தை தீட்டி விட்டு பெருமையாக சொல்லிக் கொள்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை. சிறியதாக இருந்தாலும் அதை அடைந்து எல்லோருக்கும் காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது. வீணாக்கி இருந்தால் தயவு செய்து இந்த முக்கிய மூன்று குறிப்புகளை நினைவில் வைத்து கொண்டு இந்த வருடத்தில் உங்கள் இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள்.
இந்த வருடத்தின் 4 மாதங்கள் ஓடி இருக்கலாம். இன்னும் 8 மாதங்கள் உங்களுக்காக, உங்கள் வெற்றிக்காக காத்திருக்கின்றன! Its never too late friends!