Omega ஆண்களிடம் இருக்கும் 4 அற்புத குணங்கள்!

4 Amazing Traits of Omega Men!
4 Amazing Traits of Omega Men!

ஆண் ஆளுமை வகைகளில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஆல்பா மற்றும் பீட்டா ஆண்களிலிருந்து, முற்றிலும் தனித்துநிற்கும் ஒரு ஆளுமை வகைதான் ஒமேகா ஆண்கள். ஆல்ஃபா ஆண்கள் பெரும்பாலும் ஆதிக்கம் மற்றும் தலைமைப்பண்புடன் இருப்பார்கள். இதுவே, பீட்டா ஆண்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சமூகங்களை ஒருங்கிணைக்கும் பண்புகளுடன் இருப்பார்கள். ஆனால் ஒமேகா ஆண்கள் முற்றிலும் தனித்துவமான குணங்களைக் கொண்டவர்கள். இந்தப் பதிவில் அவர்களிடம் இருக்கும் சில அற்புத குணங்கள் பற்றி பார்க்கலாம். 

ஒமேகா ஆண்கள்: ஆண்களின் ஆளுமைப் பண்பின் பெயர்கள் ஓநாய் குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஒமேகா ஓநாய்கள் அவற்றின் கூட்டத்தில் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆண்களின் அடிப்படையில் யாருக்கும் அடிபணியாத, பலவீனத்தை வெளிப்படுத்தாத நபரே ஒமேகா ஆண். பெரும்பாலும் சமூக எதிர்பார்ப்புகளை நிராகரிக்கும், தனித்துவமான ஆளுமை வகையாக ஒமேகா ஆண்கள் இருப்பார்கள். 

ஒமேகா ஆணின் பண்புகள்:  

  • ஒமேகா அண் தனது சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இவருக்கு தனியாக இருப்பது மிகவும் பிடிக்கும். தனது மகிழ்ச்சியை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார். தனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காமல், சமூக எதிர்பார்ப்புகளுக்கு அடிபணியாமல், தன் விருப்பம் போல வாழ விரும்புவார். 

  • ஆல்பா ஆணிடம் போட்டி மனப்பான்மை இருக்கும். ஆனால் ஒமேகா ஆண் தங்களின் வாழ்க்கையை திருப்தியாக வாழ விரும்புகிறார். பிறருக்கு தங்களைத் தொடர்ந்து நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இருக்காது. தனது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்தில் அதிக நிறைவைக் காண்பார். 

இதையும் படியுங்கள்:
‘சோம்பேறிக் கண்’ என்றால் என்ன தெரியுமா?
4 Amazing Traits of Omega Men!
  • ஒமேகா அண் நம்பகத்தன்மை மற்றும் மெய்யான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பார். அவர் தனது தனித்துவங்கள், ஆர்வங்கள், மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களை ஏற்றுக்கொண்டு, சமூக விதிகளுக்குக் கட்டுப்படாமல் இருக்கவே விரும்புவார். உண்மையிலேயே அவர் மீது அவர் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை, பிறர் இவரை வித்தியாசமாகப் பார்க்க வைக்கும். 

  • ஒமேகா ஆணுக்கு அறிவுப்பசி அதிகம் இருக்கும். எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தேவையில்லாத விஷயங்கள், பொழுதுபோக்குகள் போன்றவற்றில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள். அறிவை நோக்கிய ஆர்வம் அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவி, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றியமைத்து வாழ்வில் முன்னேறச் செய்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com