‘சோம்பேறிக் கண்’ என்றால் என்ன தெரியுமா?

Do you know what a 'lazy eye' is?
Do you know what a 'lazy eye' is?Oscar Wylee

‘சோம்பேறிக் கண்' என்பது அசாதாரணமான பார்வை வளர்ச்சியின் காரணமாக ஒரு கண்ணில் பார்வை குறைவதைக் குறிக்கிறது. இரண்டு கண்களில் ஒரு கண், பலவீனமாக இருந்தால், அதனை ‘சோம்பேறிக் கண்’ என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படும். சோம்பேறிக் கண்ணானது பார்க்க சாதாரணமாக இருந்தாலும், அதன் பார்வைத் திறன் குறைவாக இருக்கும். இதில் மூளையும் கண்களும் சரியாக வேலை செய்யாது. சிகிச்சை அளிக்கப்படாத சோம்பேறிக்கண் ஒரு நபரின் பார்வையில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.

சோம்பேறிக் கண்ணிற்கும் மூளைக்குமான தொடர்பு மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் இந்தக் கண்ணால் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் தெளிவில்லாமல் இருக்கும். நாளடைவில் பொருட்களை மங்கலாகக் காட்டும். கண்ணை மூளை தவிர்க்கத் தொடங்கி விடும். எனவே, சோம்பேறிக் கண் மேலும் மோசமடையும். எட்டு வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

சோம்பேறிக்கண் ஏற்படக் காரணங்கள்: குறைமாதத்தில் குழந்தை பிறத்தல், பிறக்கும்போது கண்ணின் அளவு சிறியதாக இருத்தல், குடும்பத்தில் யாருக்கேனும் சோம்பேறிக் கண் இருத்தல், குடும்பத்தில் யாரேனும் கண்ணாடி அணிந்திருத்தல் போன்றவை.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் ஊஞ்சல் விளையாட்டு!
Do you know what a 'lazy eye' is?

சோம்பேறிக்கண்ணின் அறிகுறிகள்:

1. இந்தக் குறைபாடு உள்ளவர்களின் இரு கண்களும் இணைந்து செயல்படாது.

2. தலையை சாய்த்தபடி பார்ப்பார்கள்.

3. ஒரு கண்ணை மூடி, மற்றொரு கண்ணால் பார்க்க வேண்டிய நிலை.

4. தெளிவான பார்வை கிடைக்காது.

5. கண் அசைவுகள், இயல்பற்று இருத்தல்.

6. ஒரு கண், உள்நோக்கியோ வெளிநோக்கியோ இருக்கும்.

சோம்பேறிக் கண்ணை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் விரைவில் குணப்படுத்தலாம். கண்ணாடி அணிதல், காண்டாக்ட் லென்ஸ், சொட்டு மருந்து போன்றவை ஆரம்ப நிலை சிகிச்சைகள்.

நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தால் அறுவை சிகிச்சையில் மருத்துவர் குணமாக்குவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com