4 Types of Introverts: நீங்கள் இதில் எந்த வகை!

4 Types of Introverts
Introverts

Introvert என்பது தனிமை மற்றும் அதிகம் சிந்திப்பதாக வகைப்படுத்தப்படும் ஒரு ஆளுமைப் பண்பாகும். இத்தகைய பண்பைக் கொண்டவர்கள் அதிதிவீர தனிமை விரும்பிகளாகவும், மக்களுடன் பெரிதளவில் பழக விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த introvert குணம் கொண்டவர்களை நாம் மேலும் நான்கு விதமாகப் பிரிக்கலாம். இதை தெரிந்து கொள்வது மூலமாக Introvert மனநிலை கொண்டவர்கள் தங்களை மேலும் சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும். 

சமூக Introverts: சமூக உள்முக சிந்தனையாளர்கள் தனியாக நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள். அதேநேரம் அவர்கள் அர்த்தமுள்ள சமூகத் தொடர்புகளை மதிக்கும் பண்புடையவர்கள். அவர்களால் தனிமையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஏதேனும் தேவை என்றால் மக்களோடு நெருங்கிப் பழகவும் முடியும். இவர்களது நண்பர்கள் வட்டம் சிறியதாக இருந்தாலும், நல்ல தரமான நண்பர்களுடன் பழகுவார்கள். இவர்களுக்கு உறவுகளில் உண்மையாக இருப்பது மிகவும் பிடிக்கும். 

தனிமைப்படுத்தப்பட்ட Introverts: இந்த வகை உள்முக சிந்தனையாளர்கள் சமூக Introvert-களை விட தனிமையை அதிகம் விரும்பி நேரத்தை செலவிடுவார்கள். கூட்டம் எங்கேயாவது இருந்தால் அத்தகைய இடங்களை வெகுவாகத் தவிர்ப்பார்கள். இவர்கள் புத்துணர்ச்சியாக இருக்க தனிமையான இடங்கள் உதவுகின்றன. இவர்களுக்கு சுயபரிசோதனை மற்றும் சுய விழிப்புணர்வு அதிகம். எனவே எப்பொழுதும் படிப்பது, எழுதுவது, ஆக்கபூர்வமான விஷயங்களை முயற்சிப்பது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவார்கள். இவர்களுக்கும் நண்பர்கள் வட்டம் குறைவாகவே இருக்கும். 

சிந்திக்கும் Introverts: இவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள். எதையும் அதிகமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். இவர்களது சிந்தனைகள் மற்றவர்களை விட எப்போதும் வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலும் தங்களது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க அதிக நேரத்தை செலவிடுவார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகத் தோன்றினாலும், தங்களது தனிமை உலகத்தில் மிகச்சிறப்பான விஷயங்களை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய நோக்கம் எப்போதும் பெரியதாகவே இருக்கும். அறிவார்ந்த விஷயங்களில் அதிகம் ஈடுபடுவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

பதட்டமடையும் Introverts: இந்த வகை Introverts அவர்களது பெயரில் இருப்பது போலவே பொது இடங்களில் பதட்டத்தை அனுபவிப்பார்கள். பெரும்பாலான தருணங்களில் பிறரால் மதிப்பிடப்படுவதைப் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். இவர்கள் தங்களது செயல்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே செயல்படுவார்கள். புதிய நபர்கள் அல்லது சூழ்நிலையில் பழக்கப்படுவதற்கு இவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படலாம். ஆனால் ஒருமுறை பழகிவிட்டால் நல்ல ஆழமான உறவுகளை இவர்களால் உருவாக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு சர்க்கரை தான் சாப்பிட வேண்டும்… அதிகம் சாப்பிட்டால்?  
4 Types of Introverts

இந்த நான்கு வகையான Introvert குணம் கொண்டவர்களில் நீங்கள் எந்த வகை என கமெண்ட் செய்யவும். மேலும் உங்களது பண்புகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு சரியாக நடந்து கொள்ளுங்கள். இது உங்களது சுயமு முன்னேற்றத்திற்கு பெரிதளவில் உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com