
டிப்ரஷன் அப்படின்னாலே, ஒருத்தர் சோகமா, அமைதியா, யாரிடமும் பேசாம இருப்பாங்கன்னுதான் நம்ம நினைப்போம். ஆனா, சில வகையான டிப்ரஷன் வெளிப்படையா தெரியாது. அதுக்கு பேருதான் உயர் செயல்பாட்டு மனச்சோர்வு (High-Functioning Depression). இந்த மனச்சோர்வுல இருக்கிறவங்க, வெளியில ரொம்பவே ஆக்டிவா, சிரிச்ச முகத்தோட, வேலைல எல்லாம் பெர்ஃபெக்டா இருப்பாங்க. ஆனா, மனசுக்குள்ள ஒரு பெரிய பாரத்தை சுமந்துகிட்டு இருப்பாங்க. இது அவங்க வாழ்க்கையை பெரிய அளவுல பாதிக்கும். அப்படி நாம கவனிக்கத் தவறும் 5 முக்கியமான அறிகுறிகள் என்னென்னனு இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. எப்பவும் மனசுக்குள்ள ஒரு சோகமும், பாரமும்: உயர் செயல்பாட்டு மனச்சோர்வுல இருக்கிறவங்க, வெளியில எவ்வளவுதான் சிரிச்சு பேசி ஆக்டிவா இருந்தாலும், மனசுக்குள்ள ஒருவித சோகம், பாரம், அப்புறம் பயம் இருக்கும். இதுக்கு என்ன காரணம்னு அவங்களுக்கே தெரியாது. ஒருவித வெறுமையா உணர்வாங்க.
2. சமூக நிகழ்வுகளில் மனதளவில் விலகியிருப்பது: நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் பேசும்போது, ஒருவித ஆர்வத்தோட இருக்க மாட்டாங்க. உடலளவில் அங்க இருந்தாலும், மனதளவில் எங்கேயோ இருப்பாங்க. இதுக்கு காரணம், சமூக நிகழ்வுகள்ல அவங்க முழு ஈடுபாட்டோட இருக்க விரும்ப மாட்டாங்க.
3. எதிலயும் ஆர்வம் குறைவது: ஒரு காலத்தில் பிடிச்ச விஷயங்கள், பொழுதுபோக்குகள், நண்பர்கள் கூட செலவழிக்கும் நேரம் இதுல எல்லாம் ஆர்வம் குறைஞ்சு போயிடும். இதனால, வாழ்க்கையில ஒருவித வெறுமை வரும்.
4. சுய மரியாதை குறைவது: வெளியில திறமையா இருந்தாலும், மனசுக்குள்ள தன்னம்பிக்கை இருக்காது. "என்னால இது முடியாது," "நான் நல்லவன் இல்லை"னு ஒருவித தாழ்வு மனப்பான்மை இருக்கும். இது அவங்க திறமையை வெளிக்காட்ட ஒரு தடையா இருக்கும்.
5. பசி, தூக்க முறைகளில் மாற்றம்: இந்த மனச்சோர்வுல இருக்கிறவங்க, ரொம்ப கம்மியா சாப்பிடுவாங்க, இல்லனா ரொம்ப அதிகமா சாப்பிடுவாங்க. தூக்கம் கம்மியா இருக்கும், இல்லனா ரொம்ப அதிகமா தூங்குவாங்க. இந்த மாற்றங்கள் அவங்க உடலையும், மனசையும் பெரிய அளவுல பாதிக்கும்.
இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தா, அத சாதாரணமா எடுத்துக்க கூடாது. இந்த மனச்சோர்வு உங்க வாழ்க்கையை பெரிய அளவுல பாதிக்கும்.