motivation article
motivation articleImage credit - pixabay

வெற்றிக் கனியை சுலபமாக பறிக்க 5 வழிகள்!

Published on

ரு சுலபமான வழி இருக்கிறது. எப்போதும் எடுக்கும் முயற்சியை விட, கூடுதலாக நீங்கள் கடுமையாக உழைத்தால் வெற்றிக்கு அருகில் நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற தீவிரமாக உழைக்கவேண்டும். உழைப்பின்றி வெற்றிக்கனி கிடைப்பதென்பது நிஜத்தில் சாத்தியமற்றது. உங்கள் வெற்றிக்கனியை பறிக்க இதோ 5 யோசனைகள்

இந்த முக்கிய கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேளுங்கள்.

1- உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தை காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் ஐடியா ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறீர்கள் என்ற நினைப்பே உங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து உந்துதலை அளிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நீங்கள் செய்யும் வேலை சுலபமாக தெரியும், அதனோடு உங்களுக்கு நெருக்கமும் கிட்டும்.

2-செயற்திட்டத்தை உருவாக்குங்கள்.

எத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாக ஆகிவிடும். உங்களின் இலக்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக வரையறுங்கள். இந்த திட்டம் ரெடி ஆனவுடன், பணியை தொடங்குங்கள். ஒரு ஐடியா முழுதும் நிறைவு பெறாமல் அடுத்தவற்றுக்கு தாவாதீர்கள்.

3-தொழில் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.

தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதேபோல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
motivation article

4-நேரத்தை ஒதுக்கிடுங்கள்.

உங்கள் வேலை பலு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது நல்லதல்ல. குடும்பம், நண்பர்கள் என்று அவருகளுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். அதேபோல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படிப்பது, சினிமா என்று நீங்கள் விரும்பிய ஒன்றை செய்ய தவறாதீர்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும். 

 5- இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் தொடங்கிய முக்கிய இலக்கை எப்போதும் மறவாமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிக முக்கியம். உயரிய இலக்கை அடைய மூன்று வழிகளை எழுதிவைத்து அதை ஒவொன்றாக நிறைவேற்றிடுங்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் அதே ஊக்கத்துடன், குறிக்கோளுடன் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை நீங்கள் நெருங்கமுடியும்.  உங்கள் கனவு நிறைவேற வழி கிடைக்கும். உற்சாகமாக மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!

logo
Kalki Online
kalkionline.com