Chanakya Niti
Chanakya Niti

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

Published on

- தா. சரவணா

திருக்குறள், பகவத் கீதை, சாணக்ய நீதி போன்ற நூல்களில் எழுதியிருப்பது இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது என்பது எத்தனை ஆச்சர்யம்! அவற்றில் ‘சாணக்கிய நீதி’ என்பதை சாதாரண மக்களும் படித்து பயன் பெற வேண்டும். ஆச்சாரியா சாணக்கியரின் நீதிகளில் முக்கியமான 5 விஷயங்களைப் பார்ப்போம்!

தவம்:

வெற்றி பெற தவம் செய்ய வேண்டும். எளிதில் ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு புரியாது. உலகில் உள்ள அனைத்து சாதனையாளர்களும் தங்கள் தவத்தின் பலத்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியடைந்து தங்கள் இலக்கை அடைந்தனர். தவம் இல்லாமல் ஒருவர் வாழ்க்கையில் எந்த உயர்ந்த நிலையையும் அடைய முடியாது.

வாழ்க்கையில் வெற்றி என்பது எளிதல்ல. தவம் செய்வதன் மட்டுமே வாழ்க்கையில் உயர் பதவியையும் சமூகத்தில் மரியாதையையும் அடைய முடியும்.

தவம் என்பதன் உண்மையான அர்த்தம் கடினமான சூழ்நிலைகளைத் தைரியமாக எதிர்கொள்வதாகும்.

தவறுகள்:

சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், உங்கள் சொந்த தவறுகளிலிருந்தும் மற்றவர்களின் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்காத ஒருவர், தனது வாழ்க்கையில் முன்னேற மிகவும் போராடுவார். அப்படிப்பட்டவர்கள் வெற்றிப் பாதையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

தோல்விகள்:

பொதுவாக, சிலர் தோல்வியை எதிர் கொள்ளும்போது தங்கள் இலக்குகளிலிருந்து பின்வாங்குவார்கள். இருப்பினும், அவ்வாறு செய்வது நல்லதல்ல. கடந்த காலத்தை நினைத்து ஒருபோதும் வருந்தக்கூடாது. வெற்றிக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசித்து முன்னேறுங்கள்.

இதையும் படியுங்கள்:
எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!
Chanakya Niti

மதிப்பு:

சாணக்கிய நீதியின்படி, ஒரு நபர் தன்னை மதிக்காத இடத்தில் வாழக்கூடாது. தங்கள் சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் மட்டுமே, தங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக மாறமுடியும்.

அதிர்ஷ்டம்:

ஒரு நபர் தனது வெற்றிக்கு ஒருபோதும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பக்கூடாது. ஒரு நபர் தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே தனது அதிர்ஷ்டத்தை உருவாக்க வேண்டும். ஒரு நபர் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் தனது இலக்கை விட்டு நகரக்கூடாது.

logo
Kalki Online
kalkionline.com