பணம் உங்களைத்தேடி ஓடி வரணுமா? உங்க வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் அந்த 5 ரகசிய விதிகள்!

5 Life Laws
5 Life Laws
Published on

சில நேரங்களில் நாம் அவசரமாகக் கிளம்பும்போதுதான் வண்டி பஞ்சர் ஆகும், குடையை மறந்து வைத்துவிட்டுச் செல்லும் நாளில்தான் மழை கொட்டும். இதற்குப் பின்னால் சில சுவாரஸ்யமான வாழ்வியல் விதிகள் (Laws) ஒளிந்துள்ளன. நம் வாழ்க்கையைத் தெரியாமலேயே கட்டுப்படுத்தும் ஐந்து விதிகளையும், (5 Life Laws) அவற்றை எப்படி நம் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவது என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. மர்பியின் விதி (Murphy's Law): இது நம்மில் பலருக்கும் தெரிந்த, ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிற விதி. "ஏதாவது ஒரு விஷயம் தவறாக நடப்பதற்கு வாய்ப்பு இருந்தால், அது கண்டிப்பாகத் தவறாகவே நடக்கும்" என்பதுதான் மர்பியின் விதி. உதாரணமாக, நீங்கள் மிக முக்கியமாக ஒரு மீட்டிங்கிற்குச் செல்லும்போதுதான் டிராஃபிக் ஜாம் ஆகும். இதைப் புரிந்து கொள்வதன் மூலம் நாம் என்ன செய்யலாம் என்றால், மோசமான சூழ்நிலைக்கும் தயாராக இருக்கப் பழகிக்கொள்ளலாம். எது நடந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை இந்த விதி நமக்குக் கற்றுத்தருகிறது.

2. கிட்லின் விதி (Kidlin's Law): நம்மில் பலரும் பிரச்னைக்கான தீர்வைத் தேடுவதிலேயே நேரத்தை வீணடிப்போம். ஆனால், பிரச்னை என்னவென்றே பலருக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. கிட்லின் விதி என்ன சொல்கிறது என்றால், "உங்கள் பிரச்னையைத் தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதிவிட்டாலே, அந்தப் பிரச்னை பாதி தீர்ந்துவிட்டது என்று அர்த்தம்". மனதில் குழப்பமாக இருக்கும் விஷயங்களை எழுத்து வடிவில் பார்க்கும்போது, அதற்கான தீர்வு தானாகவே புலப்படும்.

3. கில்பர்ட் விதி (Gilbert's Law): வேலைக்குச் செல்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதி இது. "வேலையில் உங்களுக்கான மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாருமே உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்". அதாவது, ஒரு வேலையை எப்படிக் கச்சிதமாக முடிப்பது, எப்படிச் சிறந்த முடிவுகளைத் தருவது என்பதை நீங்களேதான் கண்டுபிடிக்க வேண்டும். மேலதிகாரி வந்து சொல்லிக் கொடுப்பார் என்று காத்திருக்காமல், பொறுப்பைத் தன் கையில் எடுப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நீங்க ராஜா மாதிரி வாழணுமா? இந்த '48 விதி' ஃபாலோ பண்ணா போதும்!
5 Life Laws

4. வில்சன் விதி (Wilson's Law): இன்றைய இளைஞர்கள் பலரும் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வில்சன் விதி சொல்வது வேறு. "நீங்கள் அறிவிற்கும், திறமைக்கும் முன்னுரிமை கொடுத்தால், பணம் உங்களைத்தேடி வரும்". பணத்தைத் துரத்தாமல், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதில் சிறந்தவர் என்று நிரூபிக்கிறீர்களோ, அதற்கான சன்மானமாகப் பணம் தானாகவே வந்து சேரும்.

5. ஃபால்க்லேண்ட் விதி (Falkland's Law): நிறைய பேர் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மணிக்கணக்கில் யோசித்து மண்டையை உடைத்துக் கொள்வார்கள். இந்த விதி என்ன சொல்கிறது என்றால், "ஒரு முடிவு எடுக்கத் தேவையில்லாத இடத்தில், எந்த முடிவும் எடுக்காதீர்கள்". அதாவது, அவசியமில்லாத விஷயங்களுக்கு முடிவெடுக்கிறேன் என்று நேரத்தை வீணாக்காமல், அதை அப்படியே விட்டுவிடுவது சில நேரங்களில் சிறந்த முடிவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வாரன் பஃபெட்டின் 90/10 விதி: சாமானியர்களுக்கான 'கோடீஸ்வர' ஃபார்முலா!
5 Life Laws

இந்த 5 விதிகளும் நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தங்கள். இந்த விதிகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருக்கும். இல்லையென்றால், இந்த விதிகள்தான் நம்மைத் தொடர்ந்து கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com