Iron Man கற்றுத்தரும் 5 வாழ்க்கைப் பாடங்கள்.. இனி எல்லாமே சூப்பர்தான்!

Iron Man
Iron Man

அயன் மேன், மார்வெல் யூனிவர்சின் ஒரு பிரபலமான சூப்பர் ஹீரோ. தனது புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தவர். என்னதான் இந்த கதாபாத்திரம் புனைக்கதையாக உருவாக்கப்பட்டிருந்தாலும், டோனி ஸ்டார்க்கிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய வாழ்க்கைப் படங்கள் ஏராளமாக உள்ளன. இவை நமது சுய மேம்பாட்டிற்கு நிச்சயம் உதவும் என்பதால், அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

1. தனித்திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: டோனி ஸ்டார்க்கின் தனித்துவமான சிந்தனை மற்றும் தொழில்நுட்பத்தில் அவருக்கு இருக்கும் அறிவாற்றல் ஆகியவை, அவரைத் தனித்துவமான நபராகக் காட்டுகிறது. அவரது ஒவ்வொரு தோல்விகளிலிருந்தும் புதுப்புது பாடங்களைக் கற்றுக்கொண்டு, அதற்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குவதில் வல்லவர். இவரைப் போலவே நாமும் நமது வாழ்வில் நமது தனித்திருமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும்.

2. துன்பத்திலும் விடாமுயற்சி வேண்டும்: அயன் மேன் தனது வாழ்நாளில் பல துன்பங்களையும், பின்னடைவுகளையும் எதிர்கொண்டார். இருப்பினும் அவர் மனம் தளராமல், அந்தத் துன்பங்களை அவரது வளர்ச்சிக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தினார். நமது சுய முன்னேற்றத்திற்கான முயற்சியிலும், நாம் டோனி ஸ்டார்க் மனநிலையைப் பின்பற்ற வேண்டும். தோல்விகளையும் தடுமாற்றங்களையும் ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

3. தொடர்ச்சியான கற்றல் வேண்டும்: நீங்கள் அயன் மேன் திரைப்படங்களைப் பார்த்தால், அவரிடம் ஒரு தீராத கற்றல் தாகம் இருப்பதைப் பார்க்க முடியும். தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றிய புரிதலை அவர் தொடர்ந்து அப்டேட் செய்துகொண்டே இருப்பார். வாழ்நாள் முழுவதும் கற்றல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான சிறந்த உதாரணம் நமது டோனி ஸ்டார்க். இந்த மனநிலை உங்கள் வாழ்வில் பல புதிய பரிணாமங்களைத் திறக்க உதவும். 

4. புதுமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: அயன் மேன் சூழ்நிலைக்கு ஏற்ப தனது திறமைகளை பயன்படுத்துவர். அதேபோல தன்னுடைய மோசமான நிலைகளில் இருந்து அவர் மீண்டு வரும் ஆற்றல் நம்மை பிரமிக்க வைக்கும். என்னதான் ஒரு சூழ்நிலை மிக மோசமாக இருந்தாலும், அதைக் கையாளும் பல புதிய யுக்திகளை அவர் கண்டறிந்தார். எனவே நாமும் அவரைப்போல துன்பம் மற்றும் தோல்விகளில் இருந்து மீண்டு வர, புதிய முறையில் அவற்றைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
Kakapo: உலகில் உள்ள ஒரே பறக்காத கிளி இனம் இதுதான்!
Iron Man

5. உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயலுங்கள்: டோனி ஸ்டார்க், என்றுமே ஒரு சுயநலவாதி போல சிந்திக்காமல், தனது செல்வம், செல்வாக்கு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தினார். அவரது பொறுப்பை உணர்ந்து தனது வளங்களை பெரும்பாலும் நன்மைக்காகவே பயன்படுத்த முயன்றார். நாமும் இவரைப் போலவே உலகில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தும் விஷயங்களையே முயற்சிப்போம். நமது வெற்றி மற்றவர்களை மேம்படுத்தவும், நமது சமுதாயத்திற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

இப்படி, நம்முடைய சுய முன்னேற்றத்திற்கு, டோனி ஸ்டார்க்கிடமிருந்து பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். எனவே அவரைப் போலவே நாமும் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் சிறப்பான இடத்தை அடையப் போராடுவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com