
சமூகத்தில் தனித்தன்மை வாய்ந்த, உயர் மதிப்புமிக்க ஆணாக இருக்க வேண்டும் என்பது பலரின் கனவு. அதை நிஜமாக்க சில அடிப்படையான விதிகள் உண்டு. ஒரு ஆண் தனது வாழ்வை, நடத்தையை, சிந்தனையை செதுக்கிக் கொள்வதன் மூலம், அவர் தனது சூழலிலும், உறவுகளிலும் ஓர் அசைக்க முடியாத மதிப்பை பெற முடியும். இது வெறும் பணம் அல்லது பதவி சார்ந்தது அல்ல. ஆழ்ந்த குணாதிசயங்களையும், ஆரோக்கியமான மனநிலையையும் சார்ந்தது. அதன்படி, உயர் மதிப்புமிக்க ஆணாக மாறுவதற்கான 5 முக்கிய விதிகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1. தன்னம்பிக்கை:
ஒரு உயர் மதிப்புமிக்க ஆணுக்கு முதல் தேவை தன்னம்பிக்கை. உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் திறமைகளை, முடிவுகளை, பார்வைகளை நீங்கள் மதிக்க வேண்டும். சுய மரியாதை என்பது உங்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த அனுமதிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
2. பொறுப்புணர்வு:
நீங்கள் சொல்லும் வார்த்தைகளைக் காப்பாற்றுவது, செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்பது ஆகியவை ஓர் ஆணின் மதிப்பை உயர்த்தும். உங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படுவது, தவறுகளுக்குப் பொறுப்பேற்பது, வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்றவை உங்களை நம்பகமான ஒருவராக மாற்றும்.
3. இலக்கு நோக்கிய உழைப்பு:
ஒரு நோக்கமில்லாத வாழ்வு மதிப்புமிக்கதல்ல. உங்களுக்கு என்ன வேண்டும், எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். தொழில், தனிப்பட்ட வாழ்க்கை, உடல்நலம் என எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் என்ற தாகம் இருக்க வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, திறமைகளை வளர்த்துக் கொள்வது, சவால்களை எதிர்கொள்வது போன்றவை உங்களை ஒரு முன்னோடியாக மாற்றும்.
4. Emotional Intelligence:
கோபம், பயம், விரக்தி போன்ற உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளத் தெரிய வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பது, மற்றவர்களை நோகடிப்பது போன்றவை உங்கள் மதிப்பை குறைக்கும். ஒரு உயர் மதிப்புமிக்க ஆண் தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, அமைதியாகவும் நிதானமாகவும் பிரச்சினைகளை அணுகுவார்.
5. எல்லைகளை நிர்ணயிப்பது:
உங்கள் தனிப்பட்ட எல்லைகளை தெளிவாக நிர்ணயிப்பது மிக அவசியம். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும். உங்களை யாராவது அவமதித்தால் அல்லது உங்களது நேரத்தையும் மதிப்பையும் மதிக்காமல் நடந்தால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.