
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து ஒவ்வொரு நிலையிலும் சிறந்த மனிதராய் வாழவேண்டும் என்றே நினைப்பதுண்டு.
இதற்கு நாம் என்ன செய்யவேண்டுமென்று யோசிக்கையில், ஏற்கெனவே வாழ்க்கையில் வெற்றி பெற்று, பலருக்கு முன் மாதிரியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரின் முகங்கள் நினைவுக்கு வருவதுண்டு. நவீன காலத்தில் வெற்றியாளர்களில் அநேகம் பேர், வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த பாதையை நூலாக வெளியிட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
முன்னேறத்துடிக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் படிக்க வேண்டிய சில புத்தகங்களின் விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
1. பணம் தரும் மந்திரம் :
ஆசிரியர்: எஸ். கே. முருகன்
விகடன் பிரசுரம்
விலை: Rs. 210/-
மனித வாழ்க்கைக்கு மிக முக்கியத் தேவை பணம்.
அதை விட முக்கியம் அந்தப் பணத்தை நேர்மையான
வழியில் மட்டுமே சம்பாதிப்பது. அப்படி நேர்மையான
வழியில் பணம் சம்பாதித்த எடுத்துக்காட்டு
மனிதர்களின் வாழ்க்கையைப் பாடமாகக் காட்டி
வாசகர்களுக்கு ஆலோசனை தருகிறார் ஆசிரியர்.
2. உறக்கத்திலே வருவதல்ல கனவு:
ஆசிரியர்: APJ அப்துல் கலாம்
விலை: 175/-
விகடன் பிரசுரம்
சிறு வயதிலிருந்தே அனைவரும் புத்தகம் படிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின்
அடிப்படை போதனைகளில் ஒன்று. அவர், அநேக
பள்ளிக்கூடங்களில் ஆற்றிய ஊக்குவிப்பு சித்தாந்
தங்களின் தொகுப்பு இந்நூல்.
3. புத்தகத்தின் பெயர் : உன்னால் முடியும்
ஆசிரியர்: ஜார்ஜ் மேத்யூ ஆடம்ஸ்
விளக்கவுரையுடன் தொகுத்தவர்: டான் எம். கிரீன்
விலை : Rs. 199/-
விற்பனையாளர்: அமேசான்
4. புத்தகத்தின் பெயர் : நான் மனம் பேசுகிறேன்
( 'I Am The Mind' என்ற புத்தகத்தின் தமிழ் மொழி
பெயர்ப்பு) 'நீங்கள் விரும்பும் அனைத்தையும்
அடைவதற்கான மாயத் திறவுகோல். என்னைச்
சரிக்கட்டி விட்டால் எல்லாம் சரியாகிவிடும்!'
என்கிறது நூல்.
ஆசிரியர்: தீப் திரிவேதி
விற்பனையாளர்: அமேசான்
விலை: Rs. 257/-
5. புத்தகத்தின் பெயர்: 11 Rules For Life (Secrets to Level Up)
ஆசிரியர்: சேத்தன் பகத்
விற்பனையாளர்: அமேசான்
விலை: Rs. 177/-