Toxic மனிதர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ள 5 எளிய வழிகள்!

Toxic woman
Toxic People
Published on

நம்ம வாழ்க்கையில நாம சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்னுதான் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனா, சில சமயங்கள்ல நம்மள சுத்தி இருக்கிற சிலரோட பழக்கம் நம்மளோட மன அமைதியைக் கெடுத்துடும். அவங்களத்தான் நாம 'Toxic People'-னு ஆங்கிலத்துல சொல்றோம். இவங்க நம்மளோட பாசிட்டிவ் எனர்ஜியை உறிஞ்சி, நம்மள மனதளவில் சோர்வடையச் செஞ்சிடுவாங்க. அவங்ககிட்ட இருந்து நம்மள எப்படி தற்காத்துக்கிறது, நம்ம மனநிம்மதியை எப்படி காப்பாத்திக்கிறதுன்னு கொஞ்சம் விரிவா பார்க்கலாமா? 

1. ஃபர்ஸ்ட் விஷயம் யார் அந்த நச்சு மனிதர்கள்னு நாம சரியா அடையாளம் கண்டுபிடிக்கணும். எப்பப் பார்த்தாலும் குறை சொல்றவங்க, மத்தவங்கள மட்டம் தட்டிப் பேசுறவங்க, நம்ம நல்லதுக்கு யோசிக்காம அவங்க காரியம் ஆகணும்னு பார்க்கிறவங்க, தேவையில்லாம நம்ம விஷயத்துல தலையிடுறவங்க, எப்போதுமே எதிர்மறையான எண்ணங்களோட இருக்கிறவங்க. இவங்க மாதிரி ஆட்களை கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க. இவங்க நம்ம உணர்வுகளோட விளையாடி, நம்மள குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குவாங்க அல்லது நம்ம சுயமரியாதையை குறைப்பாங்க. 

2. அடுத்ததா, 'இதுவரைக்கும் தான் நீங்க பேசலாம், இதுக்கு மேல என் விஷயத்துல தலையிடாதீங்க'ன்னு மனசுக்குள்ள ஒரு கோடு போட்டுக்கோங்க, தேவைப்பட்டா மென்மையா ஆனா உறுதியா அவங்ககிட்டயும் சொல்லுங்க. எல்லா விஷயங்களையும் அவங்ககிட்ட பகிர்ந்துக்க வேண்டிய அவசியம் இல்லை. 

3. முடிஞ்ச அளவுக்கு அவங்களோட பழகுற நேரத்தைக் குறைச்சுக்கோங்க. அவசியமான பேச்சு மட்டும் வச்சுக்கலாம். பொது நிகழ்ச்சிகள்ல சந்திச்சா ஒரு புன்னகையோட நிறுத்திக்கலாம். அவங்க இருக்கிற இடத்துக்கு அடிக்கடி போறதையோ, அவங்கள வீட்டுக்கு கூப்பிடுறதையோ தவிர்க்கலாம். 

4. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி, அவங்களோட சேர்ந்து கவலைப்படவோ, கோபப்படவோ செய்யாதீங்க. அவங்க ஏதாவது பிரச்சனையைக் கிளப்பினா, அதுல நீங்க மூழ்கிடாதீங்க. அவங்களுடைய எதிர்மறை எண்ணங்கள், புகார்கள், அல்லது கிசுகிசுக்கள்ல உங்களையும் இழுக்க முயற்சி பண்ணுவாங்க. அப்படிப்பட்ட சமயங்கள்ல, 'ஓ அப்படியா, சரி' அப்படின்னு கேட்டுட்டு அமைதியா விலகிடுங்க. 

இதையும் படியுங்கள்:
உங்க வீட்டு சமையலில் சுவை அதிகரிக்க...
Toxic woman

5. உங்க மேல நீங்க அதிக கவனம் செலுத்துங்க. உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்யுங்க, நல்ல, பாசிட்டிவான நண்பர்களோட பழகுங்க, உங்க மனசுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய விஷயங்கள்ல ஈடுபடுங்க. உடற்பயிற்சி, தியானம், புத்தகம் படிக்கிறது, இல்ல உங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு எதுவா வேணா இருக்கலாம். உங்களை நீங்களே நேசிக்க ஆரம்பிச்சா, உங்க தன்னம்பிக்கை அதிகமாகும். 

எல்லோரையும் திருப்திப்படுத்த நினைச்சா, கடைசியில நாமதான் நிம்மதி இல்லாம தவிப்போம். அந்த மாதிரியான நபர்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com