சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

Morning Motivation
Morning MotivationImage Credits: Paper Tyari
Published on

ண்களோ, பெண்களோ தங்களுடைய காலை பொழுதில் இந்த 5 விதிமுறைகளையும் கடைப்பிடிக்கும் போது அந்த நாள் முழுவதுமே அவர்களுக்கு சிறப்பானதாக அமையும். இந்த 5 விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்றினால் அந்த நாள் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1. அடுத்த நாளைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இன்று இரவே குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது சிறந்ததாகும். அடுத்த நாள் ஆபிஸோ அல்லது வேறு எங்கேனும் செல்ல வேண்டுமெனில் அதற்கு தேவைப்படும் பொருட்களை இன்றே எடுத்து வைத்துக் கொள்வது, ஏதேனும் பேச வேண்டியிருப்பின் அதற்கான நோட்ஸ்களை முன்தின இரவே எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொள்வது அடுத்த நாள் காலையில் எதையும் தேடி அலையும் நேர விரயத்தை தடுத்து நிறைய நேரத்தை சேமித்து கொடுக்கும்.

2. காலையில் எழுந்திருப்பது என்பதை கேட்கும் போது சாதாரணமாக தோன்றினாலும் இதை கடைப்பிடிப்பது என்பது சற்று கடினம். காலையில் எழுவதற்கு அலாரம் வைத்தாலும், அதை தள்ளிப் போடும் பழக்கத்தை நிறுத்திவிட்டு கட்டுக்கோப்பாக காலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுவதிலேயே சோம்பேறித்தனத்தை காட்டினால் அந்த நாள் முழுவதும் சோம்பலாகவே இருக்கும்.

3. காலை எழுவது மட்டும் பத்தாது எழுந்ததுமே தங்களுடைய படுக்கையை சரிசெய்து வைப்பதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல பழக்கமாகும். எழுந்ததும் அப்படியே படுக்கையை சரிசெய்யாமல் அப்பறம் செய்யலாம் என்று தள்ளி போடும் பழக்கம் அந்த நாள் முழுவதுமே எல்லா வேலைகளையும் தள்ளி போட்டால் என்ன என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தும். எனவே காலையில் எழுந்ததுமே முதல் வேலையையே சிறப்பாக செய்வது நல்லதாகும்.

4. ஆண்களோ,பெண்களோ எவ்வளவுதான் குடும்பத்திற்காக உழைத்தாலும், காலையில் ஒரு 5 நிமிடம் காபி குடிக்கும்போது தங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். அந்த நாள் முழுவதும் மற்றவர்களுக்காக உழைக்கப் போகிறீர்கள் எனவே நமக்கான ஒரு சிறு நேரத்தை நம்மை கவனித்து கொள்ள, நாம் ரிலாக்ஸாக இருப்பதற்காக ஒதுக்குவது தவறில்லை.

இதையும் படியுங்கள்:
கொஞ்சம் உங்கள் பாதங்களையும் கவனியுங்களேன்!
Morning Motivation

5.காலையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம். காலையில் எழுந்து வாக்கிங் போவதோ அல்லது உடற்பயிற்சி கூடம் செல்வதோ எதுவாக இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்பது கண்டிப்பாக முக்கியமாகும்.

இந்த 5 விஷயங்களை தவறாமல் கடைப்பிடிப்பது நம்மை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com