வாழ்க்கையில் நம்மை முன்னேறாமல் தடுப்பது முதலில் பயம் அடுத்தது பதற்றம். நாம் வெற்றிக்காக எவ்வளவு தன் முயற்சி செய்தாலும் சரி பயமும் பதற்றமும் இருந்தால் வெற்றி என்ற இலக்கை நிச்சயமாக அடைய முடியாது. வாழ்க்கையில் பயமில்லாமலும் பதற்றம் இல்லாமல இருக்கும் மனிதர்கள் நிச்சயம் சக்சஸ் மேனாகத்தான் இருக்கிறார்கள்.
சரி பயத்தையும் பதற்றத்தையும் எப்படி விரட்டுவது மிக மிக எளிய இந்த 5 வழியை கடைப்பிடித்தால் போதும் பயமும் பதற்றமும் பறந்தோடிபோகும் அதற்கான குறிப்புகளை இப்பதிவு.
1.தேவைக்கு தகுந்த மாதிரி அது உண்மையில் தேவையான பயம்தானா? அல்லது அநாவசியமான பயமா? என்பதைக் கண்டறிந்து அதை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே ஒரு விஷயத்தை செய்யும்போது அந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதைப் பொறுத்து நீங்கள் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஒருவேளை அந்த விஷயம் அடி முட்டாள்தனம். உண்மையிலேயே 20% கூட வெற்றிக் கிடைக்காது என அறிவியல் பூர்வமாகவோ அல்லது அனுபவப் பூர்வமாகவோ தெரிந்த பிறகு அதை செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றும்போது நாம் தேவையில்லாத பயத்தைத் தவிர்க்க முடியும்.
2. அடுத்து ஒரு விஷயத்தை செய்யும்போது தோற்றுப்போய்விட்டால் என்ன செய்வது என நாம் சிந்திக்கத் துவங்கிவிடுகிறோம். எனவே தோல்வியால் ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள கற்றுக்கொள்வது அவசியம். ஒருவேளை தோல்விக்கு பயந்து எந்த முயற்சியும் செய்யாத ஒரு மனிதன், தனது இறுதிகாலம் வரை வெறுமனே இருக்க வேண்டி இருக்கும். அதனால் தோல்வியை ஏற்றுக்கொள்கிற அதில் இருந்து கற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3. அடுத்து பயத்தை மனதிற்குள் வைத்து கொண்டு இருக்கும் ஒரு மனிதனதால் எந்த முடிவையும் எளிதாக எடுக்க முடியாது. எனவே எப்பேர்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விஷயத்தை இழுத்துக் கொண்டே இருந்தால் பயமும் கூடவே இருக்கும். அந்த விஷயத்தில் எந்த முடிவும் கிடைக்காது. நல்லதோ, கெட்டதோ ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. ஒரு விஷயத்தை உறுதியாக முடிவெடுத்த பிறகுதான் செய்கிறோம். அப்படி செய்யும்போது ஒருவேளை அது தவறாக முடிந்தால்? இந்த கேள்விக்கு Plan B, Plan C என அடுத்தடுத்த திட்டங்களை வைத்து இருப்பது நல்லது. இப்படி அடுத்தடுத்த திட்டங்கள் இருக்கும்போது ஒரு நபருக்கு அந்த விஷயத்தைக் குறித்து பயமே இருக்காது.
5. வாழ்க்கை என்பது ஒரு அனுபவக் கூடம். சதா அதில் வெற்றியும் தோல்வியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த வாழ்க்கையை பலரும் திரும்பிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதில் இருக்கும் நெகட்டிவ் விஷயங்களை மட்டும் சொல்லிக் கொண்டு இருக்காமல் நெகட்டிவை எப்படி பாசிட்டிவாக மாற்றி இருக்கலாம். அல்லது மாற்ற முடியும் எனச் சமகாலத்திற்கு ஏற்ப சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதாவது வாழ்க்கை பாடத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது என்ன நடந்தாலும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அதை ஏற்றுக்கொள்கிறேன். இன்னொரு முறை அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என தைரியமான மனநிலையை ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டுவிட்டால் அவருக்கு பதற்றம் இருக்காது, பயமும் இருக்காது. இந்த வழிமுறை ஒரு மனிதனை வெற்றியின் உச்சிக்கே கொண்டு செல்லும். அதனால் பயத்தை கண்டு பயப்படாமல் அது எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்."