உங்கள் தைரியத்தை உங்களுக்கு உணர்த்தும் 5 உன்னத விஷயங்கள்

A man having a courage to something
Man and some buildings
Published on

தைரியம் என்பது பிரமாண்டமான போரில் வீரத்துடன் போராடுவதிலோ, பெரிய பெரிய விலங்குகளை அடக்குவதிலோ அல்லது சினிமாவில் வருவதில் போல் வில்லன்களை துவம்சம் செய்வதிலோ மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு விஷயங்களிலும் கூட பார்க்க படுகிறது. எப்போது, ​​​எங்கெல்லாம் நமது தைரியம் வெளிப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதற்காக எழுந்து நிற்பது

நம் நம்பிக்கைகளை நாம் பாதுகாக்கும் போது தைரியம் அடிக்கடி வெளிப்படும். ஒரு காரணத்திற்காக நியாயமாக வாதாடுவது, நாம் சொல்வது ஏற்றுக்கொள்ள படாத கருத்தாக இருந்தாலும் ஒரு கூட்டத்தில் அதை வெளிப்படையாகக் கூறுவது, தற்போதைய நிலையை பற்றி கவலைப்படாமல் எல்லாம் ஒரு நாள் மாறும் என்று நினைப்பது என எதுவாக இருந்தாலும், நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதற்கு ஆதரவாக நிற்பதற்கு ஒரு வகையான உள் வலிமை தேவை. அப்போது தைரியம் வெளிப்படும்.

2. உங்கள் ஆறுதல் மண்டலத்திற்கு அப்பால் துணிச்சல்

வாழ்க்கையின் மிகவும் உற்சாகமான தருணங்களை நம் காம்போர்ட் zone ஐ விட்டு வெளியே வரும்போது தான் அனுபவிக்க முடியும். குறிப்பாக பொழுதுபோக்கிற்காக புதிய புதிய விஷயங்களை முயற்சி செய்வது, அதன் மூலம் உருவாகும் மக்களுடன் தொடர்பு கொள்வது அல்லது தனியாக பயணம் செய்வது போன்றவற்றில் நம் தைரியம் வெளிப்படும்.

3. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துதல்

உணர்ச்சிகள் குழப்பமானதாக இருக்கலாம், ஆனால் அவற்றை உண்மையாக வெளிப்படுத்த தைரியம் தேவை. உதாரணத்திற்கு நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவது, உங்கள் பயத்தை பிறரிடம் ஒப்புக்கொள்வது அல்லது நீங்கள் தவறாக ஒரு விஷயத்தை செய்ததற்காக (தெரியாதவர்களிடம் கூட மன்னிப்பு கேட்பது, போன்ற விஷயங்களும் தைரியத்தின் வெளிப்பாடாகும். நாம் ஒருவரிடம் சண்டையிட்டு வாக்குவாதம் செய்த பின், தவறு நம் மேல் இருந்தும் கூட நாமே இறங்கி வந்து சமாதானம் பேசுவதில் கூட தைரியம் வெளிப்படும்.

4. தேவைப்படும்போது உதவி தேடுதல்

உதவி கேட்பது ஒன்றும் பலவீனம் அல்ல; அதன் மூலமும் நாம் ஞானத்தை பெறலாம். வாழ்க்கை நம்மை பல வளைவுகளில் கொண்டு செல்கிறது. பல நேரங்களில் தனிப்பட்ட நெருக்கடி, மனநலப் போராட்டங்கள் அல்லது அச்சுறுத்தும் செயல்கள் என்று எதுவானாலும் இருக்கலாம், அப்போது கூச்சப்படாமல் பார்க்காமல் பிறரிடம் உதவி கேட்பதிலும் அல்லது நாம் அந்நேரத்தில் துணிந்து உதவி செய்ய முன் வருவதிலும் நம் தைரியம் வெளிப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘எனக்கு ஏற்ற வேலை எது?’ என்று தேடுபவரா நீங்கள்? உடன் இங்கே அணுகவும்!
A man having a courage to something

5. சவால்களை எதிர்கொள்ளும் பிறருக்கு ஆதரவாக இருப்பது

தைரியம் என்பது நமக்கான ஒரு வெளிப்பாடு மட்டுமல்ல. அது மற்றவர்களை மோசமான சூழ்நிலையில் இருந்து உயர்த்துவதற்கும் பயன்படும். பிறரின் கடினமான காலங்களில் நீங்கள் கை கொடுக்கும் போது உங்களின் தைரியம் வெளிப்படும் அல்லது ஒருவருக்கு ஆதரவாக நிற்கும் போது, ​​நீங்கள் தைரியத்தின் கலங்கரை விளக்கமாக அவர்களுக்கு இருக்கிறீர்கள். இதனால் அவர்களுக்கும் ஒரு புது தைரியம் உருவாகும் .

உதாரணத்துக்கு நம் பக்கத்து வீட்டில் மேல் மாடியில் வசிக்கும் வயதான முதியோர்கள் சில நேரங்களில் கனமான பொருட்களை மேலே கொண்டு போகக்கூடிய சூழ்நிலை வரும்போது, நீங்கள் அவர்கள் கேகாமலே உதவினால் அவர்களுக்குள் ‘நம்மை பார்த்து கொள்ள ஒருவர் இருக்கிறார்’ என்ற தைரியம் உருவாகும். உதவிய உங்களுக்கோ, பெருமிதத்துடன் கூடிய தைரியமும், ‘இது போன்று நம்மால் இன்னும் நிறைய உதவ முடியும்’ என்ற உத்வேகமும் பிறகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com