‘எனக்கு ஏற்ற வேலை எது?’ என்று தேடுபவரா நீங்கள்? உடன் இங்கே அணுகவும்!

Motivation
Motivation

மனிதனாய் பிந்த அனைவரும் தன்னைத் தானே காத்துக்கொள்ள ஏதோ ஒரு வேலையை செய்துதான் ஆக வேண்டும். அது என்ன மனிதன்? பிறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் இது பொருந்தும். ஆனால், அப்படி கிடைக்கும் வேலையை விரும்பிப் பார்க்கிறோமா? இல்லையா? அதுதான் இந்தக் கட்டுரையின் புரிதல்.

மனதில் இருக்கும் ஆசைகள்:

ஒவ்வொரு மனிதனுக்கும் சில பல ஆசைகள் இருக்கும். அதில் சில ஆசைகள் உருப்படியானவையாக இருக்கும். அதாவது, முயன்றால் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டு நிஜம் ஆக்க முடியும். பொதுவாக ஆசை என்றாலே நம் இஷ்டத்தின் பேரில் நாம் ஒன்றை நினைக்கிறோம் என்று அர்த்தம். சில விஷயங்களைச் செய்யவேண்டும் என்று மனம் துடிக்கும். ஆனால், அது எல்லா நேரத்திலும் செய்யக்கூடிய ஒன்றாக இருக்காது. ஆகையால் பல தடவைகள் நாம் பிடிக்காத அல்லது யாரோ சொன்ன ஒன்றை காதில் வாங்கி செய்யத் தள்ளப்படுவோம்.

கலந்து ஆலோசித்து முடிவெடுத்துப் பாருங்களேன்!

ஒருவர் இதைச் சொல்கிறார்... ஆகையால் இதை நாம் செய்யலாம் என்று செய்து மாட்டிக்கொள்வதைவிட, என்னால் இதை செய்ய முடியுமா இல்லை முடியாதா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். அதில் உங்களுக்கு ஒரு விடை கிடைத்திருக்கும். அந்த விடையை நீங்கள் நெருங்கிப் பழகும் நபர்களோடு ஆலோசித்துப் பாருங்கள். அதிலும் ஒரு வகையான தெளிவு வரும். இறுதியில் உங்கள் மனம் சொன்னதும் ஆலோசனையில் கிடைத்ததுமாக ஒன்றிப்போகும் ஒன்றே சரியான விடையாக அமையும். அந்த ஒரு தருணம்தான் உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டமாக அமையும்.

செய்யும் தொழிலே தெய்வம்:

நம் முன்னோர்கள் கூறியதுபோல் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று கூறும் நாம் ஏதோ ஒரு தருணத்தில் அந்தத் தொழிலே நமக்கு சலிப்பைத் தருவதுபோல் உணர்வோம். அதற்குக் காரணம்

பலவாயினும் நாம் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி ஒரு கோயிலில் இருக்கும் தெய்வத்தைப் பார்த்தவுடன் நம் கைகள் இரண்டையும் நம்மை அறியாமல் சேர்ந்து கூப்பி வணங்குகிறோமோ அதுபோல் நாம் செய்யும் வேலையையும் நம்மை அறியாமல் நம் மனம் உணரத் துடிக்கும். அதற்கு நடுவில் எப்பேர்ப்பட்ட தடைகள் வந்தாலும் நாம் அதை திறம்படச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து கிடைக்கும். அப்படிப்பட்ட நிலையில் சலிப்பு ஏற்படாது.

இதையும் படியுங்கள்:
சீர்வரிசையில் பரிசான புத்தகங்கள்! 
Motivation

வேலை என்பது சுமை அல்ல:

மனதிற்குப் பிடித்த வேலை ஒன்றை செய்யும்போது அதில் என்ன கஷ்டம், பயம், அவமானத்திற்கு இடம்?. எல்லாமே நாம் பார்க்கும் பார்வையைச் சார்ந்தது. நாம் நினைப்பதைதான் மற்றவர்கள் நினைப்பார்கள் என்பதும் தவறு. மற்றும் மற்றவர்கள் எப்படி நினைப்பார்களோ என்று கருதுவதும் தவறு. ஆகையால் எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் நம் மனதிற்குப் பிடித்துவிட்டால் அது இலகுவானதாக மாறிவிடும், அவ்வளவுதான். இதை உணர்ந்தவர்கள்தான் இந்நாளில் நம் கண்முன்னே ஆலமரமாய் வாழ்ந்திருக்கிறார்கள் மற்றும் வாழ்கிறார்கள்.

அவர்களை நமது ரோல் மாடல்களாகக் கொண்டாலே நமக்கு தேவையான route கிடைத்துவிடும். அவர்கள் தங்கள் தொடக்கக் காலத்தில் சந்தித்த மற்றும் நிகழ்காலத்தில் சந்தித்துக்கொண்டிருக்கும் இன்னல்களைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது நம்முடைய வேலை பளுவானது ஜுஜுபியாகத் தெரியும். Stress எல்லாம் கரைந்து ஓடிவிடும்.

இப்படி மேல கூறிய சில முறைகளை நாம் பின்பற்றினாலே நமக்கு தேவையான அல்லது ‘நம் சூப்பர் ஸ்டார் கூறியது போல “என் வழி தனி வழி” என்று கூறும் நிலைக்கு நாம் வந்துவிடலாம். இந்த மனப் பக்குவத்தை அடைய வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com